ஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் !

ஆளுனரின் கூற்று பொய் என்கிறார் கல்வியமைச்சர் !
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கிளிநொச்சியில் கருத்து தெரிவி க்கும் போது வடமாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இக் கருத்து தொடர்பில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கருத்து தெரிவிக்கும் போது,
வடமாகாண கல்வி அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியே 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் மட்டுமே, அப்படி  இருக்கையில் எவ்வாறு 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் திரும்பும் ? ஆளூநர் தவறுதலாக 600 மில்லியன் ரூபாய் தான் 6 ஆயிரம் ரூபாய் என கூறி இருந்தார் என வைத்துக் கொண்டாலும், அதுவும் தவறே.
ஏனெனில் 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் பணத்தை அனுமதிப்பதாக கூறியதால் நாம் 4 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கான திட்டங்களை தயார் செய்து இருந்தோம்.
ஆனால் எமக்கு 1450 மில்லியன் ரூபாய் மாத்திரமே தர முடியும் என திறைசேரி உறுதி பட தெரிவித்து உள்ளது. நாம் கடந்த வாரம் கொழுப்பில்  திறைசேரியுடனான கலந்துரை யாட லின் போது கூட எமது நிதி தேவை குறித்து வலியுறுத்தினோம்.
இந்நிலையில் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப போகின்றது எனும் பேச்சு உண்மை இல்லை என தெரிவித்தார்.

Share This Post

Post Comment