வவுனியா கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் 210 ஆவது கிலோமீற்றர் கல்லிற்கு முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றடி உயரமான புத்தர் சிலை ஒன்றும், ஒன்றரை அடி உயரமான புத்தர்சிலை ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை உடைக்கப்பட்ட புத்தர்சிலைகள் இரண்டும் குறித்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது