சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவின் மத்திய பகுதியில் ஒரு விடுதிக்கு வெளியே, அதிபரின் அரன்மணை கதவுகளுக்கு அருகில் பெரிய டிரக் குண்டு ஒன்று வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமியவாத அமைப்பான அல் ஷபாப் தெரிவித்துள்ளது.
நகரத்தின் முக்கிய மருத்துவமனையில் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; அதில் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் அடங்குவர்;அந்த விடுதிக்கு அருகில் பாதுகாப்பு கூட்டம் நடைபெறவிருந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீப வருடங்களில் இந்த விடுதி அல் ஷபாப் அமைப்பால் பல முறை தாக்தலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
(பிபிசி தமிழோசை)