வடக்கு சிரியாவில், துருக்கி மற்றும் குர்து படைகள் துப்பாக்கி சண்டையை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்க ராணுவ பேச்சாளர் கூறுகையில் இது தளர்ந்த ஒப்பந்தம் என்றும் இது திடமாகும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
சிரியாவின் எல்லையில் இருந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பை வெளியேற்றி அந்த இடத்தை கைப்பற்ற துருக்கி குடியரசு தனது படைகளை அனுப்பிய பிறகு, வடக்கு சிரியாவில் தங்களுக்கு இணக்கமான துருக்கி மற்றும் குர்து படைகளுக்கு இடையில் நடக்கும் மோதல்கள் கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மறுபுறம் துருக்கி, ஐ.எஸ்.படையினருக்கு எதிரான சண்டையில் அமெரிக்காவின் சிறந்த நட்பு படையாக தன்னை நிரூபித்துவிட்ட குர்து இனப்படையினர்களின் பலம் சிரியாவில் அதிகரிப்பது குறித்த அச்சத்தில் உள்ளது.
(பிபிசி தமிழோசை)