பெயர் மாறுமா மேற்கு வங்கம் ?

பெயர் மாறுமா மேற்கு வங்கம் ?

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தை ஆளும் திரினமுல் காங்கிரஸ் இந்த பெயர் மாற்றத்தில் தீவிரமாக இருந்தபோது பாஜக மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 169வது விதிப்படி குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில்  நிறைவேற்றினர்.

இதுகுறித்து கூறிய மம்தா பேனர்ஜி ”மேற்கு வங்கம் என்ற பெயரை ஆங்கிலத்தில் பெங்கால் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த பெயர் மாற்றத்துக்கு மாநிலத்தில் இருந்து கொண்டு அரசை ஆதரிக்காதவர்களை மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இது போன்ற செயல்கள் ஒரு வரலாற்று பிழையை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னால் 1999-ல் இடதுசாரிகள் பெங்கலா என மாற்ற சொல்லியும், 2011ல் திரினமுல் காங்கிரஸ் பங்கா என பெயர் மாற்றக்கோரியும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் இதனை நாடாளுமன்றத்தில் நடைமுறை படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment