Month: August 2016

வகுப்பறையில் மாணவி அடித்துக் கொலை !

கரூரில் கல்லூரிக்குள் புகுந்து வகுப்பறையில் இருந்த மாணவியை முன்னாள் மாணவன் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர், ஈரோடு சாலையில் உள்ள கரூர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் எனும் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சோனாலி. இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சோனாலி, வகுப்பறையில் அமர்ந்திருந்தார். காலை 10 மணியளவில் அப்போது வகுப்பறையில் மாணவர் போல் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென சோனாலியை…

14 பில்லியன் டாலர் வரி செலுத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆணை !

பதினான்கு பில்லியன் டாலர் மதிப்பிலான வரி பாக்கியை செலுத்த, தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. அயர்லாந்து அரசுடன் ஆப்பிள் நிறுவனம் செய்து கொண்ட ஏற்பாடுகள் குறித்து நடந்த விசாரணையில் ஆப்பிள் நிறுவனம் தனது லாபத்தில் சிறிய தொகையை மட்டுமே வரியாக செலுத்தியது தெரியவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு பில்லியன் டாலர் வரி செலுத்துவதற்கு பதிலாக ஐம்பது டாலர்களை மட்டுமே செலுத்தியதாக அதில் தெரியவந்துள்ளது; இது…

“புர்கினி” ஆடை தடையால் பிரான்சில் உருவாகும் சர்ச்சை!

பிரான்ஸின் உல்லாச ஓய்விட நகரில் சர்ச்சைக்குரிய புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை பிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்திருப்பதன் மூலம் சுமார் 30 பிரெஞ்சு மேயர்கள் அந்த நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிவில் உரிமைகளின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அன்று வீல்நோவ் லூபெய் நகரில் நடைமுறையாகி வரும் புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை இடைநிறுத்தம் செய்வதாக பிரான்சின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தடை தொடரும் இருப்பினும்,…

துருக்கி- குர்து படைகள் துப்பாக்கி சண்டையை நிறுத்த ஒப்பந்தம் !

வடக்கு சிரியாவில், துருக்கி மற்றும் குர்து படைகள் துப்பாக்கி சண்டையை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்க ராணுவ பேச்சாளர் கூறுகையில் இது தளர்ந்த ஒப்பந்தம் என்றும் இது திடமாகும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். சிரியாவின் எல்லையில் இருந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பை வெளியேற்றி அந்த இடத்தை கைப்பற்ற துருக்கி குடியரசு தனது படைகளை அனுப்பிய பிறகு, வடக்கு சிரியாவில் தங்களுக்கு இணக்கமான துருக்கி மற்றும் குர்து படைகளுக்கு இடையில் நடக்கும் மோதல்கள்…

விதிகளை மீறியதாக ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, தேர்தலின் போது பல வகையான இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகள் அளித்த நிலையில், அதற்கான நிதி ஆதாரங்களைத் தெரிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் தற்போது கண்டித்துள்ளது. மேலும் பல்வேறு இலவச பொருட்கள்-வாஷிங் மெஷின், இலவச மொபைல் போன்,கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் முழுவதுமாக தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பதை ஆணையம் சுட்டிகாட்டியுள்ளது. இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த…