Month: July 2017

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் மருத்துவர் விவியன் பாலகிருஸ்ணனனை வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று (19.07.2017) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கின் சுகாதார துறை அபிவிருத்தி தொர்ப்pல் கலந்துரையாடப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது சிங்கப்பூர்…

தமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் !

ஸ்காபுரோவில் நடைபெற்ற விபத்தொன்றில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை அகால மரணம் ! இன்று (செவ்வாய்) காலை 11 மணியளவில் ஸ்காபுரோவில் (Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில்) நிகழ்ந்த விபத்தொன்றில் 71 வயதான தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார். பலியானவர் திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இன்று காலை ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் பேரூந்தில்…

நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால  ஒன்றுகூடல்

இவ்வருட  காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க (கனடா) ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை மாதம்  23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொம்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது. நிகழ்வு ஆரம்பமாகும் நேரம் ; முற்பகல் 10.00 மணி! பழைய மாணவர்கள், ஊர் மக்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், அனைவரையும் வருகை தருமாறு அழைக்கப்படுக்கிறார்கள். தொடர்புகளுக்கு ; 647-299-7443, 647-262-1436