தமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் !

ஸ்காபுரோவில் நடைபெற்ற விபத்தொன்றில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை அகால மரணம் !

இன்று (செவ்வாய்) காலை 11 மணியளவில் ஸ்காபுரோவில் (Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில்) நிகழ்ந்த விபத்தொன்றில் 71 வயதான தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார். பலியானவர் திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இன்று காலை ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் பேரூந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேரூந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் மரணமடைந்துள்ளதாக ரொறொன்ரோ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Share This Post

Post Comment