Month: August 2018

மேயர் ரொறியின் அலுவலகத்தில்  யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் !

யாழ் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்  ரொறன்ரோ நகர மேயரைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில்  வனையப்பட்ட கைவினைப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுக் கூடையை மேயர் ரொறிக்கு அன்பளிப்பாக வழங்கினார். ரொறிற ரொறொன்ரோ நகரம் பற்றிய நூல் ஒன்றைப் பரிசாக வழங்கியிருந்தார். மேயர் ஆர்னோல்ட் யாழ் நகரத்தில்  இடம் பெறும் கட்டுமான முயற்சிகள் பற்றி மேயர் ரொறிக்கு எடுத்துரைத்தார். நீண்ட யுத்தத்திற்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார். கல்விப் பரிவர்த்தனை, கழிவகற்றல் மற்றும் பயிற்சி வசதிகள்…

கரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்!

ஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதியில் கடந்த தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  கரி ஆனந்தசங்கரி அமைச்சராகும் வாய்ப்புடையவர் என்று பலராலும் கருதப்பட்டவர். ஆனாலும் அது நடைபெறவில்லை. பின்பு அமைச்சரவை மாற்றங்கள் நடைபெற்ற வேளைகளில் மீண்டும் அது குறித்த ஊகங்கள் எழுந்திருந்தன. ஈற்றில் அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிகழாத போதிலும் அமைச்சின் செயலாளராகும் படிநிலை முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. பல்கலாச்சார, பாரம்பரிய அமைச்சின் செயலாளர் கரிக்கு ”நாளை” தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது! இந்த நியமனம் குறித்துப் பாராளுமன்ற…