மேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் !

யாழ் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்  ரொறன்ரோ நகர மேயரைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில்  வனையப்பட்ட கைவினைப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுக் கூடையை மேயர் ரொறிக்கு அன்பளிப்பாக வழங்கினார். ரொறிற ரொறொன்ரோ நகரம் பற்றிய நூல் ஒன்றைப் பரிசாக வழங்கியிருந்தார்.

மேயர் ஆர்னோல்ட் யாழ் நகரத்தில்  இடம் பெறும் கட்டுமான முயற்சிகள் பற்றி மேயர் ரொறிக்கு எடுத்துரைத்தார். நீண்ட யுத்தத்திற்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார். கல்விப் பரிவர்த்தனை, கழிவகற்றல் மற்றும் பயிற்சி வசதிகள் தொடர்பாக ரொறியின் ஒத்துழைப்பை மேயர் ஆர்னோல்ட் வேண்டினார்.

மேயர் ரொறி அண்மையில் வடக்கு மாகாணத்துக்குச் சென்று வந்ததைப் பற்றி ஆர்னோல்டிற்குக் கூறியிருந்தார். நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை கட்டியெழுப்ப உதவும் தனது ஈடுபாட்டை அவர் வெளிப்படுத்தினார். ரொறொன்ரோ நகரம் என்ன முறைமைகளில் யாழ் நகரத்துக்கு உதவ முடியும் என்பதையிட்டுக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. யாழ் நகரத்தின் பொருளாதார ஈடேற்றம்  தொடர்பாக எதிர்காலத்தில் ரொறொன்ரோ நகரம் சேர்ந்து பனியாற்றுவதற்கான நம்பிக்கையைத் தெரியப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பில் மாநகர சபை உறுப்பினர் நீதன் சான், கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் டான்ரன் துரைராசா மற்றும் கனேடியத் தமிழர் பேரவையின் வடக்கு கிழக்கு திட்டத்தின் பொறுப்பாளர் பிரசாந்த்ஸ்ரீ சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் ரொறொன்ரோ மேயர் ரொறிக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

Share This Post

Post Comment