Month: September 2019

சுவிசில்  நான் கடந்தவை – 3

-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிற்கல்வியையும் படிக்க முடியும் என்ற போதிலும் சமூகத்தில் கெளரவ தொழில்களான அலுவலக வேலைகளிற்கு படித்தவர்களையே அந்தந்த நிறுவனங்கள் தெரிவுசெய்வது எழுதப்படாத ஒரு சட்டமாக உலாவந்தது. தொழிற்கல்வி பயில்பவர்களிற்கு அந்தந்த தொழிலைப் பொறுத்து 1-2 நாட்கள் பாடசாலையில் அந்த தொழிலிற்கு தேவையானவற்றைப் படிப்பிப்பார்கள். ஏனைய நாட்கள் அவர்கள் தங்களின் நிறுவனத்தில் வேலை கற்க…

TORONTO தமிழர் தெரு விழா

கனடா நாட்டின் தமிழர் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் ஒன்று ‘தமிழர் தெருவிழா’. ஐந்தாவது முறையாக இவ்வாண்டும் சிறப்பாக கனடாவின் டோரண்டோவில் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் டோரண்டோ மாநகரின் பிராதான வீதியான மார்க்கம் வீதியின் இருபக்கமும் அடைத்து நடந்த இவ்விழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கனடா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். இதனை கனடா நாட்டின் நாளிதழ்கள் ‘வரலாற்று நிகழ்வு’என்று வர்ணித்துள்ளன. விழாவில் கனடாவின் முதன்மை அரசியல் தலைவர்களும் அறிஞர்…

நடுகல் நாட்டப்பட்டிருக்கிறது!

இன்று எனக்குஎந்த ஓட்டமும் கிடைக்கவில்லைஎனது தொலைபேசிமணி ஒலிக்கவுமில்லைஓட்டம் கேட்டுஎந்தக் குறுஞ்செய்தியையும்யாரும்எனக்கு அனுப்பியிருக்கவில்லை ஓட்டம் கிடைக்கும் போதெல்லாம்பயணிக்கும் மனிதர்களோடுஅளவளாவும்தருணங்கள் தோறும்எனது மகனின் கதையைச்சொல்லுகிறேன் கல்லறைக்குச் சென்றுஅவனை வழிபட்டஆத்மார்த்தம்அதனால் கிடைக்கிறது பிரிவுத்துயரத்தினால்நள்ளிரவில்நான் எழுப்பிய கதறல்கள்எனக்கு அளித்த விடுதலையைஅந்த உரையாடல்களும்அளிப்பதாகச் சொன்னால்யார்தான் நம்புவார்கள் ? என்னிடம் ஓர் நாள்நீமீண்டும்உயிர்த்தெழுந்து வருவாய்என நான்நம்பிக்கொண்டிருப்பதையார்தான் நம்புவார் ? எங்கும் எதிலும்உன்னை நான்காண்பதையார்தான் உணர்வார் ? உன் முகத்திலிருந்துவழிந்து விழும்புன்முறுவலைஇறுகப்பற்றியபடிநான் எழுந்திருக்கமுயன்றிருக்கின்றேன் உன் நினைவுகளைப் பற்றியபடிஎன்னவோ எல்லாம்செய்ய முயன்றிருக்கின்றேன் உன்னை எரிக்க மனம் ஒவ்வாதுபுதைத்திருக்கின்றேன்அந்தப் புதைகுழியில்நடுகல்…

சுவிசில் நான் கடந்தவை – 2

– கபிலன் சிவபாதம் – சுவிற்சர்லாந்து  (Switzerland) அல்லது சுவிஸ் என்ற நாடு தாழ்ந்த நிலப்பகுதிகளாலும், ஆல்ப்ஸ் மலைத்தொடராலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். இதன் வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. சுவிற்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டாட்சியைத் தழுவிக்கொண்ட நாடு! 1848 ம் ஆண்டு முதல் கன்ரோன்கள் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. 41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8…

செயற்பாடுகள்

ந.முரளிதரன் அறிக்கை விரிந்து கிடக்கிறதுஅதன் ஒவ்வொரு சொற்களும்போவோர் வருவோர்அனைவரையும்விழித்துப் பார்க்கிறதுஎழுதியவர்கள் அதனைமறந்து போயிருந்தனர்ஒப்பம் இட்டோர்மறுதலை நிலைப்பாட்டுக்குவந்திருக்கலாம் அத்துமீறலுக்கும்அடக்குமுறைக்கும்சுரண்டலுக்கும் எதிராகஎவ்வளவு சொல்லாடல்களைஉதிர்த்திருப்போம் போராளிகளாய்எழுத்தர்களாய்உரைஞர்களாய்விமர்சகர்களாய்நாடகர்களாய்மறுத்தோடிகளாய்எங்களை வரித்துக்கொள்வதில்எவ்வளவு வாஞ்சையோடிருந்தோம் வரலாறு குத்துக்கரணம் அடித்துஎமது பிடரியில்அறைந்து உலுக்குகிறது ஆனாலும் தொடர்ச்சியானஎமது போராட்டத்தின்ஒரு படிக்கட்டமாக“இது” என்று ஓங்கியுரைத்துமனிதனின் உச்சந்தலையில்சம்மட்டி அடி போட்டுகுருதி கொப்பளித்துப்பாய்வதைக்கண்டு குதூகலிக்கிறதுஎம் மனம் செயற்பாட்டாளர்கள் …நீங்கள் அனைவரும்தேடிக்கொண்டிருக்கிறீர்களா ?தத்துவம் தெரியாதசிந்தாந்தம் புரியாதஅந்த எளிய மனிதர்களைநீங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை அவர்கள் வீதிகளிலும்குடிசைகளிலும்தோட்டங்களிலும்வேலைத்தலங்களிலும்சிறைகளிலும் என்று..இன்னும் இன்னும்எல்லா இடங்களிலும்செயற்பட்டபடி…! அவர்கள் அறிக்கை எழுதுவதில்லைதீர்மானம் முன்மொழிவதில்லைமாநாட்டில் உரைப்பதில்லை…

சுவிசில் நான் கடந்தவை – 1

– கபிலன் சிவபாதம் – வெளிநாட்டுத் தமிழன் என்ற முறையில் இந்த வாழ்க்கை முறையை எழுத வேண்டும் என்று ஆறு வருடங்களுக்கு மேலாக எழுதி வைத்துக்கொண்டே வந்தேன். வெளிநாட்டுக் கலாச்சாரத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் ஓரிடத்தில் பார்த்து அதற்குள் வாழ்ந்தவன் என்ற முறையில் என்னை வெளிநாட்டுத் தமிழன் என அழைப்பதே சிறந்தாக இருக்கும். நான் எந்தக் கலாச்சாரத்திற்குள் வாழ்கின்றேன் என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. எல்லோரையும் போலவே இயற்கை என்னை 1982ஆம் ஆண்டு எனது பெற்றோர்களிற்கு மகனாக இந்தப்…