சவேந்திர சில்வா

 
 
ஜனவரி 2019 இல் இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பற்றிய ஆவணக்கோவை வெளியாகியுள்ளது.
 
இவர் இந்த வருட ஆரம்பத்தில் சிறிலங்காவின் Acting Chief of Defense Staff ஆக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவால் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
இலங்கையில் 2008 -9 இல் நடைபெற்ற போரில் சவேந்திர சில்வா மிகவும் முக்கியமான முன்னிலைக் கட்டளைத் தளபதியாக இருந்தார்.
 
இந்தப் போரில் சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை கண்டறிந்தது.
 
இந்த ஆவணக்கோவையானது இன்றுவரை இராணுவ அதிகாரியாக உள்ள எந்த நபருக்கும் எதிரான மிகவும் விபரமான ஆதாரங்களைத் தருகின்றது.
 
குற்றங்களுக்கும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கும் இடையிலான தொடர்புபட்ட ஆதாரத்தை பற்றி ஆராய்கையில் அது கட்டளை கட்டமைப்புக்கள் , நடாத்தப்படும் வடிவங்கள் மற்றும் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பற்றிய சுட்டிகள் போன்றவற்றை அடையாளங்காண முற்பட்டுள்ளது.
 
இது ஒரு சிக்கலான பணி! இதில் சாதாரணமாக முக்கியமாக சூழ்நிலை ஆதாரங்கள், மற்றும் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்புபட்டுள்ளதுடன், இது எதிர்கால வழக்குகளுக்கும் பொறுப்புக்கூறலுக்கும் மதிப்பிடமுடியாத ஒரு தளத்தை வழங்குகின்றது.
 
 
(International Truth and Justice Project)

Share This Post