Month: October 2020

‘பராக் ஒபாமா’ பிரச்சார உரை !

முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் “பைடன்” சார்பாக உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதிபர் ‘டிரம்ப்பை’ பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்வது, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தவறியது மற்றும் சீனாவுடனான தனது சொந்த வியாபார நடவடிக்கைகளை மறைப்பது குறித்து ‘ஒபாமா’ கேலி செய்தார். “அவர் இரகசிய சீன வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதால் சீனாவுடன் தொடர்ந்து தனிப்பட்ட வியாபாரம் செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அது எப்படிச் சாத்தியம்?” என ‘ஒபாமா’ தெற்கு பிலடெல்பியா விளையாட்டு…

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடிவருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,037,992-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,143,863 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 514-பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 லட்சத்து 39-ஆயிரத்து 615-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில்…

கூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் எந்த மாறுதலும் நிகழவில்லை. புதிய நாடாளுமன்றத்துக்கான கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் ஓன்று நடந்தது முடிந்துள்ளது.     முதலில் நாடாளுமன்ற குழுவின் தலைவர் தெரிவு நடைபெற்றது . நாடாளுமன்ற குழுவின் தலைவராக இரா.சம்பந்தன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேச்சாளர் தெரிவு நடைபெற்றது.     கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பேச்சாளராக விளங்கும் சுமந்திரன், தான் ஐந்து வருடங்களாகப் பேச்சாளராக இருந்து விட்டேன் என்றும்…

கனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை

தென்னமரவடி பண்ணைக்கு 70 ஆடுகள் வரை வேண்டி விடப்பட்டுள்ளன. கொண்டு வரப்பட்ட ஆடுகள் இரண்டு குட்டிகளை முதல் வாரத்திலேயே ஈன்றுள்ளன. அவற்றைப் பராமரிக்க மூன்று பேர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்தப் பண்ணை கனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் 20 ஏக்கர் காணியில் தொடக்கப்பட்டுள்ளது. தென்னமரவடிக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மக்கள் 1983-1984 காலகட்டத்தில் அடித்துத் துரத்தப்பட்டனர். இப்போது அந்தக் கிராமத்தில் 80 குடிகள் அளவில் மீள்குடியேறியிருக்கிறார்கள். அந்தக் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள் மீண்டும் குடியேறுவதாயின், அவர்களுக்கு…

பிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஸ்ரோ (plastic Straw) மற்றும் மளிகைப் பைகள் போன்றவை; 2021 ஆம் ஆண்டில் கனடிய மத்திய அரசு தடை செய்யத் திட்டமிட்டுள்ள ஆறு பொருட்களில் முக்கியமானவையாகும். இது நிலப்பரப்புக்கு கேடு விளைக்கும் பிளாஸ்டிக்கை ஒரு நச்சுப் பொருளாக வகைப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இன்று செய்தியாளர் கூட்டத்தில், சுற்றுச்சூழல் அமைச்சர் “ஜொனாதன் வில்கின்சன்” இந்த பட்டியலை வெளியிட்டார். சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தின் 2019 தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் உள்ளடங்கியிருந்தது. இதில் ஸ்டைர்…

தமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்

 அமீரலி,மேர்டொக்பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா?…

அமெரிக்க தூதுவர் பேட்டிக்கு சீனத் தூதரகம் எதிர்ப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம் மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க…

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?   – புருஜோத்தமன் தங்கமயில் –   தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தினையும், கதவடைப்புப் போராட்டத்தினையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகள் வாக்கு அரசியல் ரீதியாக தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில் ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும், அதன் ஊடக சர்வதேசத்துக்கு செய்தி சொல்வதும்…

வசந்தபுரத்துக்கு ஐம்பது கழிப்பறைகள்!

‘வசந்தபுரத்திற்கு 10 மலசல கூடங்கள்’ என ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியான கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ‘வசந்தபுரத்திற்கு 50 மலசல கூடங்கள்’ திட்டமாக மாறியிருக்கிறது! அனைத்துக் குடும்பங்களும் தற்போது மலசல கூடங்களை அமைக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர். குடும்பங்களது முழுமையான பங்களிப்புடனேயே பணிகள் தொடர்கிறது. ஒரு சில மலசல கூடங்களின் கட்டுமானப் பணிகள் முற்றும் நிலைக்கு வந்து விட்டது. கட்டுமானப் பணிகளை எம். ஏ. சுமந்திரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை குறித்து ஹெகலிய ரம்புக்வெல

கேள்வி :- ஊடகத்துறை அமைச்சர் அவர்களே! ஊடகத்துறை சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கிறது. குறிப்பாக 35 ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டு கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று பொறுப்பற்ற வகையில் பதில் வழங்கியிருக்கிறீர்கள்? ஏன் அவ்வாறு கூறினீர்கள்? பதில் :- காணாமல் போனவர்கள் தொடர்பில் எல்.எல்.ஆர்.சியின் அறிக்கையின் படி 21 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர். அதில் 6000 பேர்…