கேள்வி :- ஊடகத்துறை அமைச்சர் அவர்களே! ஊடகத்துறை சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கிறது. குறிப்பாக 35 ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டு கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று பொறுப்பற்ற வகையில் பதில் வழங்கியிருக்கிறீர்கள்? ஏன் அவ்வாறு கூறினீர்கள்?
பதில் :- காணாமல் போனவர்கள் தொடர்பில் எல்.எல்.ஆர்.சியின் அறிக்கையின் படி 21 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர். அதில் 6000 பேர் இராணுவத்தினர். 15000 பேர் சாதாரண பொதுமக்கள். இதில் பத்திரிகையாளர்களும் அடங்குவர். இங்கிருக்கின்ற பிரச்சினை காணாமல் போனவர்களுடைய பிரச்சினையை உறுதி செய்வது என்பதாகும். உதாரணமாக இராணுவத்தில் 6000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். சில வேளைகளில் இவர்கள் யுத்தத்தில் காணாமல் போயிருக்கவேண்டும் அல்லது டுவுவுநு யின் யுத்தத்தில் இராணுவ வீர்கள் இறந்திருக்கக்கூடும். அவர்களின் உடல்கள் கூட எண்ண முடியாமல் போயுள்ளது என்றே கூறமுடியும்.
கேள்வி :- 2000 – 2009 வரையில் உங்களுடைய ஆட்சி தான் இடம்பெற்றது. இந்தக் காலகட்டத்தில் தான் 35 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். நான் இராணுவத்தையோ அல்லது பொது மக்களையோ கேட்கவில்லை. இதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில் :- ஆம். ஆனால் பிரச்சினை இப்படித்தான் இருக்கின்றது. 30 வருட காலமாக நீடித்தது யுத்தம். நான் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ச்சிகளைச் செய்து நன்கு அறிந்திருக்கின்றேன். காணாமல் போனவர்கள் பற்றிய கேள்விக்கு எமக்கு பூரணமான பதிலை வழங்க முடியாது. உதாரணமாக இராணுவத்தின் ஒரு தொகுதியினரை விடுதலைப்புலிகள் சிறை பிடித்திருந்தார்கள். அதேபோன்று விடுதலைப்புலிகளின் ஒரு தொகுதியினரை இராணுவத்தினரும் சிறை பிடித்திருந்தார்கள். யுத்தத்தின் போது பரஸ்பரம் மோதல்கள் இடம்பெறுவது வழமை. அதில் பலர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புக்களும் உண்டு. இச்சந்தர்ப்பதிலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களும் காணாமல் போனோர் பட்டியலில் தான் சேர்க்கப்படுவர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர் நஷ்ட ஈடு பெறுவதற்காக காணாமல் போயுள்ளதாக எல்.எல்.ஆர்.சியில் முறைப்பாடும் செய்திருக்கிறார்கள். 21000 பேர் காணாமல் போயுள்ளதாக எல்.எல்.ஆர்.சி கூறுகிறது. மீண்டும் கூறுகிறேன். இதில் 6000 பேர் இராணுவத்தினர். 15000 பேர் பொது மக்கள். 30-40 வரையான ஊடகவியலாளர்கள் இதற்குள் அடங்குவர். யுத்தத்தில் மரணித்திருக்கவேண்டும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கவேண்டும். 6000 இராணுவம் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் உடல்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அப்போது இலங்கையில் இருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தினால் குறித்த மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. அதிலிருந்து உறுதியாக 6000 பேர் காணாமல் போயுள்ளதாக என்னால் கூறமுடியும். 6000 பேர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு உறுதிசெய்துள்ளது. இவ்விடயம் ஒரு அரசியல் தந்திரம் போல் இருக்கிறது என நினைக்கிறேன். காணாமல் போனவர்கள் சிங்கள – தமிழ் – முஸ்லீம்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள்.
கேள்வி :- காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேட்கப்பட, அதற்கு நீங்கள் அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கலாம் எனக் கூறியிருக்கிறார்கள்? இதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?
பதில் :- சரியாக என்னால் கூற முடியாது. உதாரணமாக யாராவது பொலிஸ் பிரிவில் இருக்கும்போது பொலிசாரிடம் நாம் அந்த அறிக்கைகளை கேட்டால் அவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். பொலிஸ் அதற்கான பொறுப்பினை கூறவேண்டும். யுத்தத்தில் யாராவது இறந்திருந்தால் நாம் அந்த உடல்களை யாரும் பொறுப்பேற்றிருக்க மாட்டார்கள். அப்படியானால் அதைப்பற்றி சரியாக நிரூபிக்க முடியாது. ஆனால் அதைக் கண்டுபிடிக்க முயற்சிகளைச் செய்கின்றோம். உதாரணமாக ஒரு அயல் வீட்டில் இருப்பவர்களை காணவில்லை என்றால் நாம் எப்படி பொறுப்பெடுப்பது. பொலிஸ் பொறுப்பில் இருந்து காணாமல் போயிருந்தால் அதனை நாம் பொறுப்பெடுக்கலாம். யுத்த காலத்தில் காட்டுக்குள் இராணுவத்திற்கும் -விடுதலைப்புலிகளுக்கும் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பலர் காணாமல் போயுள்ளனர். அவ்வாறெனில் காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்கள் தான்.
கேள்வி :- தற்போது நீங்கள் ஊடக அமைச்சர் என்ற வகையில், காணாமல் போன, கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 35 ஊடகவியலாளர்களின் உறவுகளுக்கு நீங்கள் எத்தகைய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கப்போகிறீர்கள்?
- பதில் :- காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று முறையிடலாம். அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை நாம் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்போம் என்று ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.