‘வசந்தபுரத்திற்கு 10 மலசல கூடங்கள்’ என ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியான கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ‘வசந்தபுரத்திற்கு 50 மலசல கூடங்கள்’ திட்டமாக மாறியிருக்கிறது!
அனைத்துக் குடும்பங்களும் தற்போது மலசல கூடங்களை அமைக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர். குடும்பங்களது முழுமையான பங்களிப்புடனேயே பணிகள் தொடர்கிறது. ஒரு சில மலசல கூடங்களின் கட்டுமானப் பணிகள் முற்றும் நிலைக்கு வந்து விட்டது. கட்டுமானப் பணிகளை எம். ஏ. சுமந்திரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.