தென்னமரவடி பண்ணைக்கு 70 ஆடுகள் வரை வேண்டி விடப்பட்டுள்ளன. கொண்டு வரப்பட்ட ஆடுகள் இரண்டு குட்டிகளை முதல் வாரத்திலேயே ஈன்றுள்ளன. அவற்றைப் பராமரிக்க மூன்று பேர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இந்தப் பண்ணை கனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் 20 ஏக்கர் காணியில் தொடக்கப்பட்டுள்ளது. தென்னமரவடிக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மக்கள் 1983-1984 காலகட்டத்தில் அடித்துத் துரத்தப்பட்டனர். இப்போது அந்தக் கிராமத்தில் 80 குடிகள் அளவில் மீள்குடியேறியிருக்கிறார்கள்.
அந்தக் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள் மீண்டும் குடியேறுவதாயின், அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுதல் முக்கியமானது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மனம் வைத்தால் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த இலகுவாக இருக்கும். எதிர்காலத்தில் மாட்டு வளர்ப்பு, விவசாயம் போன்ற திட்டங்களும் இந்தப் பண்ணையில் மேற்கொள்ளப்பட உள்ளன.




