தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் எந்த மாறுதலும் நிகழவில்லை. புதிய நாடாளுமன்றத்துக்கான கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் ஓன்று நடந்தது முடிந்துள்ளது.
முதலில் நாடாளுமன்ற குழுவின் தலைவர் தெரிவு நடைபெற்றது . நாடாளுமன்ற குழுவின் தலைவராக இரா.சம்பந்தன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேச்சாளர் தெரிவு நடைபெற்றது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பேச்சாளராக விளங்கும் சுமந்திரன், தான் ஐந்து வருடங்களாகப் பேச்சாளராக இருந்து விட்டேன் என்றும் இனிமேல் இன்னொருவர் பேச்சாளராக இருப்பதே முறையானதாக இருக்கும் என்று கூறிப் , புதிய பேச்சாளராக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் பெயரைப் பிரேரித்தார் . அதை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் அதை வழிமொழிந்தார்.
ஆனால் ரெலோக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ அவர்கள் செல்வம் அடைக்கலநாதனை நியமிக்கும்படி பிரேரித்திருந்தார். செல்வம் தெரிவுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாரல்ஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பாராளுமன்றத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு எதிராக ரெலோ இயங்கியதாகக் குற்றசாட்டு ஒன்றினை முன்வைத்து, அவ்வாறான கட்சியை சேர்ந்த ஒருவர் எப்படிக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்க முடியும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
சம நேரத்தில் சுமந்திரன் அவர்களும் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் அரசுக் கட்சியின் வாக்குச் சரிவை ஏற்படுத்தும் விதமாகப் பாராளுமன்றத் தேர்தலின் போது கருத்துக்களை வெளியிட்டவர் . எனவே அவர் இருக்க முடியாது என்று கூறினார். ரெலோவுக்கு விரும்பினால் கொரடா பதவியைக் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ரெலோ அதற்குச் சம்மதிக்காமல் பேச்சாளர் பதவி வேண்டும் என்று வற்புறுத்தினர். இதனை எல்லாம் செவிமடுத்த சம்பந்தன் இவ்வளவு சண்டை போட்டுப் பேச்சாளர் யார் என்று தேர்வு செய்ய வேண்டிய தேவை இல்லை. அடுத்த கூட்டத்தில் இது பற்றிய முடிவை வாக்களிப்பின் மூலம் எடுப்போம் என்று கூறி சிக்கலை முடித்து வைத்தார்.