ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஸ்ரோ (plastic Straw) மற்றும் மளிகைப் பைகள் போன்றவை; 2021 ஆம் ஆண்டில் கனடிய மத்திய அரசு தடை செய்யத் திட்டமிட்டுள்ள ஆறு பொருட்களில் முக்கியமானவையாகும்.
இது நிலப்பரப்புக்கு கேடு விளைக்கும் பிளாஸ்டிக்கை ஒரு நச்சுப் பொருளாக வகைப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இன்று செய்தியாளர் கூட்டத்தில், சுற்றுச்சூழல் அமைச்சர் “ஜொனாதன் வில்கின்சன்” இந்த பட்டியலை வெளியிட்டார்.
சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தின் 2019 தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் உள்ளடங்கியிருந்தது. இதில் ஸ்டைர் குச்சிகள், சிக்ஸ் பேக் மோதிரங்கள், பிளாஸ்டிக் கட்லரி மற்றும் கடினமான மறுசுழற்சி பிளாஸ்டிக்குகளிலிருந்து தயாரிக்கப்படும் உணவை எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் சிறிய பிளாஸ்ரிக் கொள்கலன்கள் அடங்கும்.
டிசம்பர் வரை இதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிப்படுமென ‘ரூடோ’ அரசாங்கம் கூறுகிறது. ஒட்டாவாவின் இத்தகைய திட்டங்கள் மற்றும் குறிப்பாக பிளாஸ்டிக்குகளை நச்சு வகைப்படுத்துவது பற்றி தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் ஆல்பேர்ட்டா போன்றவை குறிப்பிடத்தக்க எதிர்ப்பினை வெளிப்படுத்துமென எதிர்ப்பார்க்கலாம்.