Month: September 2022

முக்காடு அணிய மறுத்த அமெரிக்க தொலைக்காட்சியாளர்; நேர்காணலை மறுத்த ஈரானிய அதிபர்

இரானில், ‘எல்லா நேரங்களிலும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும், ஏழு வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும்’ என்று அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இதன் காரணமாக, இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு அந்தநாட்டுப் பெண்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசின் புதிய ஆடைக் கட்டுப்பாடு விதியை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி அண்மையில் பொலீசாரால் கைதுசெய்யப்பட்ட 22 வயது மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், கடந்த வெள்ளியன்று பொலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு, இவரைப் பேட்டி எடுக்க, தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்தியேக தயாரிப்புகளோடு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. ஆனால், இப்ராஹிம் ரெய்சி நெறியாளர் ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி அந்த நேர்காணலை தவிர்த்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகவியலாளர் கிறிஸ்டியன் அமன்பூர் தனது ட்விட்டர் பதிவில், “அமெரிக்க மண்ணில் ஈரானிய அதிபரின் முதல் நேர்காணல் இதுவாகும். அதனால், வாரக்கணக்கில் திட்டமிட்டு, நேர்காணல் அன்று எட்டு மணிநேரமாக மொழிபெயர்ப்பு உபகரணங்கள், விளக்குகள் மற்றும் கேமராக்களை அமைத்து நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் அதிபர் ரெய்சி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதிபர் நேர்காணலுக்கு வருவதற்காக 40 நிமிடங்கள் காத்திருந்தேன். ஆனால் அவர் நேர்காணலை ரத்து செய்துவிட்டார்.நேர்காணல் தொடங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு இரான் அதிபரின் உதவியாளர் ஒருவர் என்னிடம், `அதிபர் இது முஹர்ரம் மற்றும் சஃபர் புனித மாதங்கள் என்பதால் நேர்காணலில் மட்டும் தலையில் முக்காடு அணியுங்கள்’ என்று பரிந்துரைத்தார். ஆனால், நான் அதைப் பணிவுடன் மறுத்துவிட்டேன். நாங்கள் நியூயோர்க்கில் இருக்கிறோம், ஹிஜாப் தொடர்பான சட்டமோ பாரம்பரியமோ இல்லாத இடத்தில், இரானுக்கு வெளியே நான் அவர்களை நேர்காணல் செய்வதாலும், இதற்கு முந்தைய எந்த இரான் அதிபரும் ஹிஜாப் அணியக் கூறியதில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். (விகடன்)

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம்

வீரகேசரி ஏட்டில் வீ.தனபாலசிங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து இந்த பத்தியில் ஏற்கெனவே பல தடவைகள் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு தடவை அது குறித்து எழுதவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. அதற்கு காரணம் இலங்கையில் அந்த ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரன் பிரதீப் ஜெயவர்தன கடந்தவாரம் வெளியிட்ட கருத்தேயாகும். முன்னாள் ஜனாதிபதியின் 116 வது பிறந்ததின நினைவாக கொழும்பில் கடந்தவாரம் (செப்.16) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதீப்…

புட்டினைக் கண்டித்து பைடன் ஐநாவில் உரை – 10 முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம், @POTUS தற்போது நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை அமர்வில் பல்வேறு நாட்டு தலைவர்களும் உரையாற்றி வருகின்றனர். இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். உணவுப் பாதுகாப்பின்மை, மோதல்கள், இயற்கை பேரழிவுகள் உட்பட உலகம் முழுவதும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு அதிபர் பைடன் உரையை தொடங்கினார். யுக்ரேன் போர் யுக்ரேன் விவகாரம் குறித்துப் பேசும்போது, கடந்த ஆண்டு உலகம் மிகப்பெரும் எழுச்சியையும்,…

ஆட்சிமுறைத் தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்

  -கலாநிதி ஜெகான் பெரேரா- ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்கு பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9வது தீர்மானம் இதுவாகும். இலங்கையின் சர்வதேச மதிப்புக்கு பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும்…

வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் 18.09.22 அன்று இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அரசியல் தீர்வு என்பது சமஸ்டிக் கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு – சுமந்திரன்

அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (18.09) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசுக் கட்சியின்…

ஜெனிவாவில் நடைபெறும்,மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரவை  (GTF) வலியுறுத்தியுள்ளது

ஜெனிவாவில் நடைபெறும், மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரவை  (GTF) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேரவை, போரின் போது பாரியளவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், அனைத்து சமூகங்களினதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான  பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) ஆற்றிய பங்கு இந்த விடயத்தில் முக்கியமானது. கடந்த மாதம் வரை உயர் ஸ்தானிகராக…

முடியாட்சி ஒழிப்பு பற்றிக் கனடியப் பிரதமர்

கனடியப் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, பணவீக்கம், காலநிலை மாற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தொடர்ச்சியான வேலைகளின் தேவை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு மத்தியில், முடியாட்சியை ஒழிப்பதற்கான எந்தவொரு செயல்முறையும் கனடியர்களுக்கு “முதன்மையானதல்ல” என்று கூறுகிறார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் கனடியத் தூதுக்குழுவை  வழி நடத்திச் சென்ற ட்ரூடோ இலண்டனில் இருந்து குளோபல் நியூசுக்கு அளித்த பேட்டியில்,  அரசியின் மரணம் இந்த நாட்டிற்கு என்ன அர்த்தம் என்பதையும், கனடியர்களுக்கு முடியாட்சி ஒழிப்பை விடப் பெரிய…

திருமலையில் வீட்டுத்தோட்டம் அமைக்க உதவி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் கப்பல்துறை, பீலியடி, மாங்காய் ஊற்று,கன்னியா, இலுப்பைக்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள, ஐந்நூறு ( 500) வறிய குடும்பங்களுக்குத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் 300,000.00 உரூபா பெறுமதியான வீட்டுத்தோட்டம் செய்வதற்குரிய நாற்றுகளையும் விதைகளையும் இன்று (2022.09.10) வழங்கியது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் இந்த உதவிகளை வழங்கி வைத்தார். பட்டணமும் சூழலும்…

கனடியத் தமிழர் நிதிசேர் நடை நிதி இலக்கு எட்டப்பட்டது

தாயக உறவுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உதவி வழங்க  கனடியத் தமிழர் பேரவையினால் நடத்தப்பட்ட கனடியத் தமிழர் நிதிசேர் நடையின் நிதி இலக்கு 50,000 கனடிய டொலர்கள் எட்டப்பட்டது. கனடியத் தமிழர் பேரவை நிதிசேர் நடை ஏற்பாடு குறித்து வெளியிட்ட அறிக்கை : “இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக–பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளது. ஒருகாலத்தில் வலுவாக இருந்த சுகாதார அமைப்பு வீழ்ச்சியைநோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மின்சாரப் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறைஆகியவற்றால்…

ரூபி மார்க்கம் கல்விச்சபைக்கு போட்டியிடுகிறார்

ரூபி இரட்ணசிங்கம் மார்க்கம் கல்விச்சபை வேட்பாளர் ( 5&7 வட்டாரங்கள்) ஒன்ராறியோ மாகாண சமூகசேவை ஊழியராகவும், ஆரம்பப் பாடசாலைக் கல்வியாளராகவும் கடைமையாற்றிய ரூபி, மார்க்கம் நகரில் தற்போது வசித்து வருகிறார். இவர் நீண்ட காலமாக சமூகசேவைகளில் ஈடுபட்டுவரும் பின்னணியை உடையவர். இவர், கடந்த 23  ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினருக்காக அரச நிறுவனங்கள் பலவற்றில் கடைமையாற்றியதோடு யோர்க் பிராந்திய சமூக சேவை அமைப்புக்கு ஊடாகப் பல இளைஞர் திட்டங்களையும் உருவாக்கியிருக்கிறார். ரூபி இரட்ணசிங்கம் மார்க்கம் சமூகத்தினருக்கு…