கனடியத் தமிழர் நிதிசேர் நடை நிதி இலக்கு எட்டப்பட்டது

தாயக உறவுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உதவி வழங்க  கனடியத் தமிழர் பேரவையினால் நடத்தப்பட்ட கனடியத் தமிழர் நிதிசேர் நடையின் நிதி இலக்கு 50,000 கனடிய டொலர்கள் எட்டப்பட்டது.

கனடியத் தமிழர் பேரவை நிதிசேர் நடை ஏற்பாடு குறித்து வெளியிட்ட அறிக்கை :

இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூகபொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளது. ஒருகாலத்தில் வலுவாக இருந்த சுகாதார அமைப்பு வீழ்ச்சியைநோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மின்சாரப் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறைஆகியவற்றால் நோயாளிகள் ஆபத்தில் உள்ளனர்.” – ஐக்கியநாடுகள் சபை

14வது வருடாந்த தமிழ்க் கனடிய நிதிசேர் நடை செப்ரெம்பர் 11, 2022 அன்று ஸ்காபுரோவில் உள்ள தொம்சன்பூங்காவில் ஆரம்பமாக உள்ளது. இந்த ஆண்டு நடை  மூலம் திரட்டப்படும் நிதி, இலங்கை முழுவதிலும் உள்ளமருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

இலங்கையானது அதன் மோசமான நிதிச் சரிவால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதால், உயிர் காக்கும்மருந்துகளின் பற்றாக்குறையை மருத்துவமனைகள் அதிகளவில் எதிர்கொள்கின்றன. 2022 ஆம் ஆண்டுக்கானதமிழ்க் கனடிய நிதிசேர் நடை மூலம் திரட்டப்படும் நூறு வீத வருமானம் வடக்கு, கிழக்கு, மத்தி, தெற்கு ஆகியநான்கு பிராந்தியங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்குப் பயனளிக்கும்.

தெல்லிப்பளை வைத்தியசாலை போன்ற புற்றுநோய் வைத்தியசாலைகள் நோயாளிகளுக்கான சிகிச்சையைத்தடையின்றிப் பேணுவதற்கான அத்தியாவசிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்க முடியாமல் திணறுகின்றன. இப் பற்றாக்குறையின் தீவிரத்தை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், நோய்வாய்ப்படுதல்மற்றும் காயமடைதல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சமீபத்திய நேர்காணலில், கூறியுள்ளார்.

ரேபிஸ், கால்கை வலிப்புக்கான மருந்துகள் மற்றும் முழுமையான இரத்தப் பரிசோதனைகளை நடத்துவதற்குத்தேவையான மருந்துகள் பற்றாக்குறையில் அடங்கின்றன. இழை பொருட்கள், பஞ்சு, கம்பளி, துணி, அறுவைசிகிச்சைக்கான பருத்தி உறைகள் மற்றும் இரத்தமாற்றத்திற்கான பொருட்கள் போன்ற பெரும்பாலானஅத்தியாவசியப் பொருட்கள் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

இலங்கை முழுவதிலும் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள், உயிர் காக்கும்அடிப்படை மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு நிதி கேட்டு வருகின்றனர்.

தமிழ்க் கனடிய நிதிசேர் நடையில்  பங்குகொண்டு நீங்கள் வழங்கும் நிதிப் பங்களிப்பானது, பின்வரும்பிராந்தியங்களில் சேவை செய்யும் மருத்துவமனைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளைஉடனடியாகக் கொண்டுசேர்க்க உதவும்:

புற்றுநோய் வைத்தியசாலைதெல்லிப்பளை

மாவட்ட பொது வைத்தியசாலைவவுனியா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைகளுபோவில

மாவட்ட பொது வைத்தியசாலைநுவரெலிய

Share This Post