திருமலையில் வீட்டுத்தோட்டம் அமைக்க உதவி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் கப்பல்துறை, பீலியடி, மாங்காய் ஊற்று,கன்னியா, இலுப்பைக்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள, ஐந்நூறு ( 500) வறிய குடும்பங்களுக்குத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் 300,000.00 உரூபா பெறுமதியான வீட்டுத்தோட்டம் செய்வதற்குரிய நாற்றுகளையும் விதைகளையும் இன்று (2022.09.10) வழங்கியது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் இந்த உதவிகளை வழங்கி வைத்தார்.

பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் திரு பொன்னம்பலம் . தனேஸ்வரன், பட்டணமும் சூழலும் பிரதேச சபை முன்னாள் துணைத் தலைவர் திரு வெ.சுரேஷ்குமார் பட்டணமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் திருமதி இராசலெட்சுமி அம்மா மற்றும் திரு நே.சந்திரமோகன் கிராம அலுவலர்கள்,அபிவிருத்தி அலுவலர்கள், விவசாய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த வீட்டுத் தோட்டம் செய்வதற்கான நாற்றுகளையும் விதைகளையும் வழங்கு வதற்கான அனுசரணையைக் கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது

Share This Post