மூன்றாவது உலக மனிதநேய சமூக நீதி மாநாடு

மூன்றாவது உலக மனிதநேய சமூக நீதி மாநாடு !

சமூக நீதி பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா, கனேடிய மனிதநேய அமைப்புக்களுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றது. ரொறொன்ரோ, ஸ்காபுரோவில் அமைந்துள்ள சென்ரானியல் கல்லூரியில் செப்ரெம்பர் 24 காலை 9 முதல் இரவு 9 வரையும், செப்ரெம்பர் 25 காலை 9 முதல் மாலை 5 வரையும் இம் மாநாடு இரண்டு நாட்கள் இடம்பெறும்.

மானமிகு ஆசிரியர் வீரமணி, தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின்(இணையவழி), கனடிய பாராளுமன்றத் தலைவர் மார்க் கோலன்ட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, மருத்துவர் செந்தில்குமார் மற்றும் தமிழ்நாட்டு, அமெரிக்க, ஈழப் பேராசிரியர்கள், மனித நேய மாண்பாளர்கள் இம் மாநாட்டில் பங்கு பெறுகின்றனர்.

கட்டணம் 100 கனடிய டொலர்கள்

இரண்டு நாட்கள் மாநாட்டில் மூன்று நேர உணவுடன் பதிவு செய்து கொள்ள கீழேயுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

periyaricon22.ca அல்லது https://centreforinquiry.ca/international-humanism-conference-on-social-justice/

மேலதிக தொடர்புகளுக்கு: +17083611998

Share This Post