ரூபி இரட்ணசிங்கம்
மார்க்கம் கல்விச்சபை வேட்பாளர் ( 5&7 வட்டாரங்கள்)
ஒன்ராறியோ மாகாண சமூகசேவை ஊழியராகவும், ஆரம்பப் பாடசாலைக் கல்வியாளராகவும் கடைமையாற்றிய ரூபி, மார்க்கம் நகரில் தற்போது வசித்து வருகிறார். இவர் நீண்ட காலமாக சமூகசேவைகளில் ஈடுபட்டுவரும் பின்னணியை உடையவர்.
இவர், கடந்த 23 ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினருக்காக அரச நிறுவனங்கள் பலவற்றில் கடைமையாற்றியதோடு யோர்க் பிராந்திய சமூக சேவை அமைப்புக்கு ஊடாகப் பல இளைஞர் திட்டங்களையும்
உருவாக்கியிருக்கிறார்.
ரூபி இரட்ணசிங்கம் மார்க்கம் சமூகத்தினருக்கு பல ஒன்றிணைப்புக்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வேண்டிய பல திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
ரூபி, ரொறொன்ரோ மாநகரசபை, United way மற்றும் ஒன்ராறியோ சிறுவர் சமூகநல சேவைகள் அமைச்சு ஆகியவற்றுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
கோவிட் 19 காலகட்டத்தில் ரூபி இரட்ணசிங்கம், சமூகங்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காகவும் தமிழ் மரபுத் திங்களுக்காகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.
கனடாவின் மிகப் பெரிய கல்விச்சபையான TDSB யில், மாணவர்கள், பெற்றோர்களுக்கான சமூக சேவையாளராகப் பல ஆண்டுகளாக ரூபி பணி புரிந்துள்ளார்.