முடியாட்சி ஒழிப்பு பற்றிக் கனடியப் பிரதமர்

கனடியப் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, பணவீக்கம், காலநிலை மாற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தொடர்ச்சியான வேலைகளின் தேவை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு மத்தியில், முடியாட்சியை ஒழிப்பதற்கான எந்தவொரு செயல்முறையும் கனடியர்களுக்கு “முதன்மையானதல்ல” என்று கூறுகிறார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் கனடியத் தூதுக்குழுவை  வழி நடத்திச் சென்ற ட்ரூடோ இலண்டனில் இருந்து குளோபல் நியூசுக்கு அளித்த பேட்டியில்,  அரசியின் மரணம் இந்த நாட்டிற்கு என்ன அர்த்தம் என்பதையும், கனடியர்களுக்கு முடியாட்சி ஒழிப்பை விடப் பெரிய விடயங்கள் பல இருப்பதாகச் சொல்லியுள்ளார்.

Share This Post