Fiona சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – கனடியத் தமிழர் பேரவை

Fiona சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அற்லான்டிக் கனடா மக்களுக்கு உதவி வழங்குவதற்காகத் தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கனடியத் தமிழர் பேரவை, கனடா வாழ் தமிழ்ச் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.

Fiona சூறாவளி ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, அற்லான்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபெக்கில் உள்ள பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அவசர நிவாரண உதவி தேவைப்படுகிறது. பெருமழை, வெள்ளம், அதிக காற்று மற்றும் புயல் போன்றவை மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதற்கு காரணங்களாய் அமைந்தன. வீடுகள் மற்றும் வீதிகள் அழிக்கப்பட்டன. மேலும் அவை உள்கட்டமைப்புகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தின.

ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு அனைத்தையும் இழந்துள்ளனர். தற்போது நீங்கள் வழங்கும் ஆதரவு, நிவாரணம் வழங்கும் அமைப்புகளின் மூலம் வாழ்நாளில் எப்போதாவது வரும் புயல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் குறைக்க உதவும். அற்லான்டிக் கடற்கரையை அண்டியுள்ள தொண்டு நிறுவனங்கள் ஏற்கனவே தற்காலிகத் தங்குமிடம், உடைகள், உணவு, சுகாதாரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு வழங்குகின்றன. ஆகவே உங்கள் ஆதரவும் உதவியும் அவசரமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுகின்றது.

கனடிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நிவாரணம், மீட்பு மற்றும் ஆபத்துக் குறைப்பு முயற்சிகளுக்காக மக்களால் வழங்கப்படும் உதவிகளுக்கு ஈடான வகையில் கனடிய அரசும் தனது உதவிகளை வழங்கும்.

அற்லான்றிக் கனடா முழுவதிலும் உள்ள தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண உதவிகளுக்கு, நேரடியாக நன்கொடை வழங்குமாறும் ஆதரிக்குமாறும் கனடியத் தமிழ்ச் சமூகத்தைக் கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது. நிவாரண முயற்சிகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களின் பட்டியலைக் கீழே பார்க்கவும். பாதுகாப்பான வகையில் நன்கொடையை வழங்கத் தரப்பட்ட தொடுப்பைப் பயன்படுத்தவும்.

Donate to Hurricane Fiona Relief Efforts

Share This Post