த. மனோகரன் நாட்டின் இனத்தின் மொழியின் வரலாற்றோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் காலத்திற்குக் காலம் இடம் பெறுவது வழமையாகும். கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த சம்பவங்களை மீள மதிப்பீடு செய்து எதிர்காலத்தில் விடப்பட்ட தவறுகள் திரும்பவும் இடம் பெறாத வகையில் நமது சிந்தனையை, செயற் பாடுகளைச் சீர்செய்து கொள்வதற்கு வரலாறு உதவுகின்றது. அதனால் வரலாற்றின் பெறுமதி வாய்ந்ததாக அமைகின்றது. மொழி ரீதியாகப் பல்வேறு தாக்கங்களுக்கு ஆட்பட்ட நம்மவர்கள், தமிழர்கள் மொழியுரிமைக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டமை வரலாறு அவற்றிலேயொன்றாகக்…

“ஏரியல் ஷரோன்” இறந்தாரா ?

-நடராஜா முரளிதரன்- சில நாட்களுக்கு முன் இறந்த முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் “ஏரியல் ஷரோன்” மேற்குலகத் தலைவர்களின் அஞ்சலியோடு,   அரச மற்றும் பூரண இராணுவ மரியாதையோடு அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டார்.  இறக்கும்போது அவருக்கு  85 வயது. 2006ஆம் ஆண்டு முதல், “ஏரியல் ஷரோன்”  இஸ்ரேலின்  மருத்துவமனையொன்றில் இறக்கும்  வரை நினைவுகளற்ற “கோமா” நிலையில் உயிருள்ள சடலமாகவே இருந்து வந்துள்ளார்.   . பல்வேறு  பதவிகளை வகித்த  “ஏரியல் ஷரோன்”  இஸ்ரேலின்…

கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…!

  கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…! -நடராஜா முரளிதரன்- கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால்,…

மேயர் ரொறியின் அலுவலகத்தில்  யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் !

யாழ் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்  ரொறன்ரோ நகர மேயரைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில்  வனையப்பட்ட கைவினைப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுக் கூடையை மேயர் ரொறிக்கு அன்பளிப்பாக வழங்கினார். ரொறிற ரொறொன்ரோ நகரம் பற்றிய நூல் ஒன்றைப் பரிசாக வழங்கியிருந்தார். மேயர் ஆர்னோல்ட் யாழ் நகரத்தில்  இடம் பெறும் கட்டுமான முயற்சிகள் பற்றி மேயர் ரொறிக்கு எடுத்துரைத்தார். நீண்ட யுத்தத்திற்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார். கல்விப் பரிவர்த்தனை, கழிவகற்றல் மற்றும் பயிற்சி வசதிகள்…

கரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்!

ஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதியில் கடந்த தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  கரி ஆனந்தசங்கரி அமைச்சராகும் வாய்ப்புடையவர் என்று பலராலும் கருதப்பட்டவர். ஆனாலும் அது நடைபெறவில்லை. பின்பு அமைச்சரவை மாற்றங்கள் நடைபெற்ற வேளைகளில் மீண்டும் அது குறித்த ஊகங்கள் எழுந்திருந்தன. ஈற்றில் அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிகழாத போதிலும் அமைச்சின் செயலாளராகும் படிநிலை முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. பல்கலாச்சார, பாரம்பரிய அமைச்சின் செயலாளர் கரிக்கு ”நாளை” தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது! இந்த நியமனம் குறித்துப் பாராளுமன்ற…

”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்!

”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம் ! இஸ்ரேலின் தலைநகரமாக ‘ஜெருசெலெமை’ அமெரிக்கா அங்கீகரிக்கப் போவதாக ஜனாதிபதி ”டிரம்ப்” அறிவித்த சில நாட்களின் பின்னர், இரவு உணவிற்கு ‘ரமலாவில்’ நண்பரின் வீடொன்றுக்கு ‘நியூயோர்க்கர்’ சஞ்சிகையின் பத்தியாளர் Raja Shehadeh சென்றார். அந்த வீட்டுச் சந்திப்பு பாலஸ்தீன சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கவில்லை. மேலும் வழக்கறிஞரான அவர் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் ஒரு பேராசிரியர், ஒரு கட்டடக் கலைஞர், ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் பாலஸ்தீனிய சிறு வணிகர்களுக்கு…

”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது!

அன்பின் கனடியத் தமிழர் பேரவை உறுப்பினர்களே, ஆதரவாளர்களே, நலன் விரும்பிகளே! எமது தைப்பொங்கல் இரவு விழாவை ஒளிபரப்புவதற்கு; ரூபவாகினியின் தமிழ்ச்சேவை விடுத்த வேண்டுகோளுக்கு கனடியத் தமிழர் பேரவை (“பேரவை”)  அனுமதி வழங்கியமை பற்றி   சனவரி 3, 2018 அன்று   மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். கனடியத் தமிழர் பேரவையானது ஆரம்பத்தில் இருந்தே கனடாவிலும், தாயகத்திலும் வாழும் தமிழர்களுடைய நலனை முன்னிறுத்தி சிறிலங்காவில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. 2009 ஆயுதப் போராட்ட முடிவிற்குப் பின்னராக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட  பேரழிவுகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான வன்செயல்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கவும், நீதியான தீர்வினை வழங்கவும் வலியுறுத்தி வருகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டும் துரிதகதியில்  அதனை   நடைமுறைப்படுத்தும் பொருட்டும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வேலைத்திட்டத்தில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தினால் இயற்றப்பட்ட தீர்மானம் 30/1 (நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனிதஉரிமைகள்) இனை    நிறைவேற்றக் கடுமையாக உழைத்து  வருகின்றோம்! இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களை விடுவித்தல், சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்தல், காணமால் போனோர் பற்றியவிசாரணைகளை முன்னெடுத்தல், வடக்கு-கிழக்கு வாழ் தமிழர் வாழ்வாதார, வணிக மேம்பாட்டை உறுதி செய்தல் போன்றவை எமது செயற்திட்டங்களில்முக்கியமானவை! அத்தோடு புதிய  அரசியலமைப்பு ஒன்றின்  உருவாக்கத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றோம்.  இலங்கை வாழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவினால் தான் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றமானது சாத்தியமாகும். ரூபவாகினிக்கு எமது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய வழங்கிய அனுமதி தொடர்பாக எமது உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகளைச்சந்தித்தோம். அவர்களது கருத்துகளை சிரத்தையோடு கேட்டறிந்தோம். பெரும்பாலானோர் தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கானமுயற்சிகளில் சகல தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற வேண்டியஅவசியத்தை ஏற்றுக்கொண்டனர். இருந்தும் ரூபவாகினி, தமிழ்ச்சேவையின் எமது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்வதற்கான வேண்டுகோளைப்  ‘பேரவை” ஏற்றுக்கொள்வதற்கான காலம் இதுவல்ல என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்கள். இக்காரணங்களை முன்னிட்டு ரூபவாகினியின் தமிழ்ச்சேவை கனடியத் தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளாது  என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களே, நலன்விரும்பிகளே, உங்கள் கருத்துகளுக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றி. இப்படிக்கு உண்மையுள்ள, இயக்குனர் சபை கனடியத் தமிழர் பேரவை

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி!

‘நாங்கள் விரக்தியடைய முடியாது’ எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி! ஆர்.சம்பந்தன் அவர்கள், இலங்கைப் பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராகவும், நாட்டின் மிகவும் மூத்த அரசியல்வாதியாகவும், ஆறு தசாப்த காலமாக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கிறார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தலைமை வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இணையணியை ஆதரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தோல்வியடையச் செய்தது. மூன்று வருடங்கள் முடிவடைந்த…

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் மருத்துவர் விவியன் பாலகிருஸ்ணனனை வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று (19.07.2017) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கின் சுகாதார துறை அபிவிருத்தி தொர்ப்pல் கலந்துரையாடப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது சிங்கப்பூர்…

தமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் !

ஸ்காபுரோவில் நடைபெற்ற விபத்தொன்றில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை அகால மரணம் ! இன்று (செவ்வாய்) காலை 11 மணியளவில் ஸ்காபுரோவில் (Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில்) நிகழ்ந்த விபத்தொன்றில் 71 வயதான தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார். பலியானவர் திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இன்று காலை ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் பேரூந்தில்…