Category: Articles

தமிழ் மக்களின் ”காத்திருத்தல்” !

தமிழ் மக்களின் ”காத்திருத்தல்” – நடராஜா முரளிதரன் – (2013/02/24) புலம்பெயர் சமூகங்கள் என்பதனை எந்த நாட்டினதும், எந்த இனத்தினதும், எந்தச் சமூகத்தினதும் நெருக்கடியான காலகட்டங்களிலும் நாம் அவதானிக்கலாம். “யூதர்கள்” ஏனைய இனங்களால் அழிக்கப்பட்டபோது ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களாகப் புலம் பெயர்ந்து வந்திருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவில் பிரிட்டிஸாரின் படையெடுப்புக்குத் தாக்குப் பிடிக்க முடியாத “ஆப்பிரிக்கான்ஸ்” இனத்தவர்கள் தங்களது நிலப்பரப்பைக் கைவிட்டுக் கால்நடைகளையும் , தங்களது உடமைகளையெல்லாம் திரட்டிக் கட்டியெடுத்துக் கொண்டு “கரவன்” என்று அழைக்கப்படும் ஊர்திகள் மூலம் மத்திய…

ஆட்சிமுறைத் தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்

  -கலாநிதி ஜெகான் பெரேரா- ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்கு பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9வது தீர்மானம் இதுவாகும். இலங்கையின் சர்வதேச மதிப்புக்கு பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும்…

‘பராக் ஒபாமா’ பிரச்சார உரை !

முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் “பைடன்” சார்பாக உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதிபர் ‘டிரம்ப்பை’ பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்வது, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தவறியது மற்றும் சீனாவுடனான தனது சொந்த வியாபார நடவடிக்கைகளை மறைப்பது குறித்து ‘ஒபாமா’ கேலி செய்தார். “அவர் இரகசிய சீன வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதால் சீனாவுடன் தொடர்ந்து தனிப்பட்ட வியாபாரம் செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அது எப்படிச் சாத்தியம்?” என ‘ஒபாமா’ தெற்கு பிலடெல்பியா விளையாட்டு…

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடிவருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,037,992-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,143,863 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 514-பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 லட்சத்து 39-ஆயிரத்து 615-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில்…

தமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்

 அமீரலி,மேர்டொக்பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா?…

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?   – புருஜோத்தமன் தங்கமயில் –   தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தினையும், கதவடைப்புப் போராட்டத்தினையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகள் வாக்கு அரசியல் ரீதியாக தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில் ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும், அதன் ஊடக சர்வதேசத்துக்கு செய்தி சொல்வதும்…

சிறுபான்மை அரசின் சவால்கள்

கனடிய லிபரல்கள்: “சிறுபான்மை அரசின் சவால்கள்” -நடராஜா முரளிதரன்- “லிபரல்கள்” சிறுபான்மை அரசாங்கத்தை நகர்த்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். பிரதமர் “ட்ரூடோவும்”அவரது சகாக்களும் எதையும் செய்யத் துரிதப்படுவதாகத் தெரியவில்லை. புதிய “வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை” விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அப்பால் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி அளித்த எந்தவொரு காரியத்தையும் நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை வகுக்க லிபரல் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.. தாக்குதல் பாணித் துப்பாக்கிகள் உட்பட கைத்துப்பாக்கிகளைத் தடைசெய்யப் புதிய நடவடிக்கைகளை எடுப்பது சிக்கலானது…

சுவிசில்  நான் கடந்தவை – 3

-கபிலன் சிவபாதம்- அடிப்படைக் கல்வி முடிவுற்றதும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் (படிக்கவிருக்கின்ற தொழிலைப் பொறுத்தது) தொழிற்கல்வியைத் தொடர முடியும். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிற்கல்வியையும் படிக்க முடியும் என்ற போதிலும் சமூகத்தில் கெளரவ தொழில்களான அலுவலக வேலைகளிற்கு படித்தவர்களையே அந்தந்த நிறுவனங்கள் தெரிவுசெய்வது எழுதப்படாத ஒரு சட்டமாக உலாவந்தது. தொழிற்கல்வி பயில்பவர்களிற்கு அந்தந்த தொழிலைப் பொறுத்து 1-2 நாட்கள் பாடசாலையில் அந்த தொழிலிற்கு தேவையானவற்றைப் படிப்பிப்பார்கள். ஏனைய நாட்கள் அவர்கள் தங்களின் நிறுவனத்தில் வேலை கற்க…

சுவிசில் நான் கடந்தவை – 2

– கபிலன் சிவபாதம் – சுவிற்சர்லாந்து  (Switzerland) அல்லது சுவிஸ் என்ற நாடு தாழ்ந்த நிலப்பகுதிகளாலும், ஆல்ப்ஸ் மலைத்தொடராலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். இதன் வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. சுவிற்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டாட்சியைத் தழுவிக்கொண்ட நாடு! 1848 ம் ஆண்டு முதல் கன்ரோன்கள் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. 41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8…

சுவிசில் நான் கடந்தவை – 1

– கபிலன் சிவபாதம் – வெளிநாட்டுத் தமிழன் என்ற முறையில் இந்த வாழ்க்கை முறையை எழுத வேண்டும் என்று ஆறு வருடங்களுக்கு மேலாக எழுதி வைத்துக்கொண்டே வந்தேன். வெளிநாட்டுக் கலாச்சாரத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் ஓரிடத்தில் பார்த்து அதற்குள் வாழ்ந்தவன் என்ற முறையில் என்னை வெளிநாட்டுத் தமிழன் என அழைப்பதே சிறந்தாக இருக்கும். நான் எந்தக் கலாச்சாரத்திற்குள் வாழ்கின்றேன் என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. எல்லோரையும் போலவே இயற்கை என்னை 1982ஆம் ஆண்டு எனது பெற்றோர்களிற்கு மகனாக இந்தப்…