Category: Cinema

‘இயக்குநர் திலகம்’ கோபாலகிருஷ்ணன் காலமானார்!

தமிழ் திரையுலகில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியவரும், ஆழமான கதை வசனத்தால் மக்களை கவர்ந்தவரும், திரை உலகில் ‘இயக்குநர் திலகம்’ என்று அறியப்பட்டவருமான கே எஸ் கோபாலகிருஷ்ணின் இறுதிச் சடங்களில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர் கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் சனிக்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த அவருக்கு வயது 86. கே.எஸ்.ஜி என திரையுலகத்தால் அழைக்கப்பட்ட அவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 70க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.…

கமலஹாசன் விருதைத் திரும்ப அளிக்க மாட்டார்!

இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவருவதாகக் கூறப்படுவதற்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப அரசுக்கே அனுப்பிவரும் நிலையில், தேசிய விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன் தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திரும்பித் தரப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். தேசிய விருதுகளை திரும்ப அளிப்பவர்களுக்கும் கூட பொறுமையுடன் கூடிய சகிப்புத்தன்மை தேவை என்றார் அவர். இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணர்ச்சி அதிகமாகியுள்ளதாகவும், சகிப்புத்தன்மை குறைந்துள்ளதாகவும் குறை கூறி விஞ்ஞானிகள், திரைப்பட துறையினர் மற்றும் எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த…

அவதார் ஒரு வாக்குமூலம் – ஜெயமோகன்

1988ல் மங்களூர் திரையரங்கு ஒன்றில் ராபர்ட் போல்ட் எழுதி ரோலண்ட் ஜோ·ப் இயக்கிய ‘த மிஷன்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். என்னுடைய சிந்தனையில் ஆழமான ஒது திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம் அது. அதுவரை நான் கிறித்தவ மதத்தையும் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்வையை மிகவும் விரிவாக்கியது. அதன்பின் நான் வாசித்த ஏராளமான நூல்களுக்கான தொடக்கம் அந்த திரைப்படம்தான். 1750களில் தென்னமெரிக்க பழங்குடிகளின் நிலங்களை ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளார்கள் கைப்பற்றி அவர்களை அடிமையாக்கி வணிகம் செய்ததின் சித்தரிப்பு இந்த திரைப்படம். …

”தீபன்” படம் பற்றிய புரிதல்

தீபன் படம் திரையரங்குகளுக்கு வந்து மூன்று வாரங்களாகிவிட்ட நிலையில் அந்தப் படம் பற்றிய புரிதல் தமிழ் பரப்பிலே மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ் பொது புத்தி சார்ந்து எதெற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு குறைகளை உருப்பெருக்கு கண்ணாடி வைத்து தேடி முன்வைத்து தங்களை மோதாவிகளாக காட்ட முறையும் ஒரு கூட்டம்…. சோபாசக்தி ஒரு புலி எதிர்ப்பாளர் அதனால் இந்தப்படம் நிச்சியமாக ஒரு புலி எதிர்ப்பு படம் அது போராட்டத்துக்கு எதிரான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல ஏற்றுகிறது…

‘தீபன்’ திரைப்படம் இன்று ரொறொன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில்!

‘தீபன்’ திரைப்படம் இன்று ரொறொன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் தியைிடப்படுகிறது.இன்றிரவு ஒன்பது மணிக்கு Elgin and Winter Garden Theatre Centre இத்திரைப்படம் காண்பிக்கப்படும். பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜாக்கஸ் அடியார்ட் இயக்கிய ‘தீபன்’ என்ற படம், கான்ஸ் விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய விருதை வென்றிருந்தது. இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி மூவரும் பாரீஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து…