Category: Events

‘சேனன்’ மற்றும் ‘கற்சுறா’ ஆகியோரின் நூல்கள் வெளியீடு!

சேனனின் “லண்டன்காரர்” மற்றும் கற்சுறாவின் “அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை” ஆகிய நூல்களின் வெளியீடு 5215 Avenue East , Unit 224 இல் 5.12.2015 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

“தமிழரும் சட்டவியலும்” –  மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்  மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்  “தமிழரும் சட்டவியலும்“  நிகழ்ச்சி நிரல்  “மனு நீதி“  – வைத்தியகலாநிதி இ.லம்போதரன் “தேசவழமைச் சட்டம்” – சட்டத்தரணி  வேலுப்பிள்ளை  இந்திரசிகாமணி “ஈழத்துப்  போர்க்காலச் சூழலில் சட்டவியல் அமுலாக்கம்” – திரு. கணேசரட்ணம் சிதம்பரநாதன் ” கனடியச் சட்டமும் தமிழர் வாழ்வியலும் ” – சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன்  தொகுப்புரை – சட்டத்தரணி  சண் முருகேசு  ஐயந்தெளிதல் அரங்கு  நாள்: 28-11-2015 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை, இடம்: ரொறன்ரோ…

இரு நாவல்கள் வெளியீடு – முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர் பாலசுந்தரம்

வன்னி (300 பக்க நாவல்) ”பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து இருபத்தியாறு நீளாண்டுகள் போராடி முடிந்து தமிழீழ சுதந்திரப் போர் முடிந்து ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து புனர்வாழ்வு பூர்த்தி செய்து வெளியே வரும் மேஜர் சிவகாமி கூறும் நவீனம் இது!” A militant’s silence (300 பக்க நாவல்) வன்னி நாவலின் ஆங்கில வடிவம் பேராதனை பல்கலைக்கழகத்தில் 1963ஆம் ஆண்டு வரலாறு,புவியியல்,தமிழ் ஆகிய பாடங்களைக் கற்ற  கதிர் பாலசுந்தரம் (யூனியன் கல்லூரி முன்னாள்…

குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

நேற்றைய தினம் (4/11/2015) தோழர் குமார் குணரட்னம் அவர்கள் சுகயீனமுற்றிருந்த தாயாரை பார்க்க சென்றிருந்த வேளையில் கோகாலை பொலீசாரால் கைது செய்யப்படட்டார். அவரை நாடு கடத்தும் முகமாகவே இந்த கைது நடவடிக்கையினை இலங்கை அரசு மேற்க்கொண்டிருந்தது. தோழர் குமார் அவர்கள் உயிராபத்து காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்து அந்த நாட்டு பிரஜா உரிமை பெற்ற ஒருவர். நல்லாட்சி புதிய அரசு நாட்டை விட்டு அரசியல் காரணங்களால் வெளியேறிய அனைவரையும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தது. அந்த வகையில்…