கனடிய லிபரல்கள்: “சிறுபான்மை அரசின் சவால்கள்” -நடராஜா முரளிதரன்- “லிபரல்கள்” சிறுபான்மை அரசாங்கத்தை நகர்த்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். பிரதமர் “ட்ரூடோவும்”அவரது சகாக்களும் எதையும் செய்யத் துரிதப்படுவதாகத் தெரியவில்லை. புதிய “வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை” விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அப்பால் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி அளித்த எந்தவொரு காரியத்தையும் நிறைவேற்றுவதற்கான கால அட்டவணையை வகுக்க லிபரல் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.. தாக்குதல் பாணித் துப்பாக்கிகள் உட்பட கைத்துப்பாக்கிகளைத் தடைசெய்யப் புதிய நடவடிக்கைகளை எடுப்பது சிக்கலானது…
சிறுபான்மை அரசின் சவால்கள்
