Category: Literature

அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்

அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள் -அ.ராமசாமி- மானுடவியல் அறிஞர் விக்டர்டர்னர் ‘சடங்கிலிருந்து அரங்குக்கு’ (From Ritual To Theatre) என்றொரு புகழ் மிக்க சொற் றொடரைப் பயன்படுத்தியுள்ளார். சடங்குகளிலிருந்து தான் நாடகக்கலை உருவாகியது என மேற்கத்தியச் சிந்தனை களும்  அதன் வழியான ஆய்வுகளும் சொல்லியுள்ளன. உலகத்திலுள்ள நாடகப் பள்ளி களும் நாடக ஆர்வலர்களும்  ஓரளவு அது உண்மைதான் என ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த ஒத்துக் கொள்ளலின் பேரில் அரங்கச் செயல்பாடுகளுக்கு-குறிப்பாக நடிப்புக்கான பயிற்சிகளுக்கு- மரபான சடங்குநிகழ்வுகளோடு…

உன் அழைப்பிற்கு நன்றி. – சக்கரவர்த்தி

உன் அழைப்பிற்கு நன்றி. ==================== -சக்கரவர்த்தி- இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும்…

எஸ்.பொவின் “சடங்கு” நாவல் குறித்து எழுத்தாளர் அ.ஜேசுராசா!

சடங்கு -அ.ஜேசுராசா-        மறைந்தும் மறையாத மூத்த எழுத்தாளர்எஸ்.பொ. நினைவாக, அவரது சடங்கு நாவலை எடுத்து இரண்டு நாள்களாக வாசித்தேன். 1966 ஆம் ஆண்டு சுதந்திரன் வாரப் பத்திரிகையில் தொடராக வந்த அந்த நாவல், 1971 இல் கொழும்பு அரசு வெளியீடாக நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அப்போது வாசித்ததற்குப் பின்னர், நீண்ட இடைவெளியின் பிறகு இப்போதுதான் வாசித்தேன். எனக்கு நன்கு பிடித்தது; முக்கியமான நாவல் என்ற உணர்வு. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்…

கவிஞன் கவிதை: நிலம், போர், காதல்

-மண் குதிரை- இலங்கைத் தமிழ்க் கவிதைகள், இந்தியத் தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுபட்டவை. புதுக்கவிதை பிறப்பதற்கு முன்பான இந்தியத் தமிழ்க் கவிதைகளுடன் இலங்கைத் தமிழ்க் கவிதைகளுக்கு உறவு உண்டு. அந்தக் காலகட்டத்திய மரபின் தாக்கத்தை இலங்கைத் தமிழ்க் கவிதைகளும் பிரதிபலித்தன. ஆனால் புதுக்கவிதை பிறந்ததற்குப் பிறகான இந்தியத் தமிழ்க் கவிதைகளின் நிலை வேறு. அவற்றில் மரபின் பாதிப்பு உள்ளடக்கம் ரீதியாகவும் மெல்லக் குறைந்து இன்று கிட்டத்தட்ட இல்லாமல் ஆகியிருக்கிறது. மாறாக இலங்கைத் தமிழ்க் கவிஞர்கள் மரபை உள்வாங்கி தங்கள்…

கில்லர் பரிசு ரொறொன்ரோவைச் சேர்ந்த ஆந்திரே அலெக்ஸிசுக்கு!

இவ்வருடத்துக்கான Scotiabank Giller பரிசு, ரொறன்ரோவைச் சேர்ந்த André Alexis அவர்களின் Fifteen Dogs என்ற நாவலுக்குக் கிடைத்துள்ளது. கனடாவின் சிறந்த புனைகதையாளருக்கு வருடா வருடம் வழங்கப்படும் இந்த பரிசுக்காக, இம்முறை 168 சமர்ப்பிப்புக்கள் கிடைத்திருந்தன. சர்வதேசரீதியான ஐந்து நடுவர்களைக் கொண்ட குழு, ரொறன்ரோ மிருக வைத்தியசாலை ஒன்றிலுள்ள 15 நாய்களுக்கு மனித உணர்வுகள் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை உள்ளார்ந்தமாகவும் தத்துவார்த்தமாகவும் ஆராயும் இந்த நாவலை பரிசுக்குரிய நாவலாக தெரிந்திருந்தது. நவம்பர் மாதம் 10ம் திகதி நிகழ்ந்த…

ஸ்காபுரோவில் 7.11.2015 சனியன்று வெங்கட் சாமிநாதன் நினைவு நாள் நிகழ்வில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி!      

வெங்கட் சாமிநாதன் காலமானார்!

-‘பதிவுகள்’ வ.ந.கிரிதரன்- திரு.வெங்கட் சாமிநாதன் மறைந்தார். தமிழ்க் கலை, இலக்கிய உலகின் தவிர்க்க முடியாததோர் ஆளுமை சரிந்தது! தொடர்ந்து அதிர்ச்சியான இழப்புச் செய்திகளாகவே வருகின்றன. தமிழ்க்கலை, இலக்கிய உலகில் முக்கிய ஆளுமைகளிலொருவரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்தாரென்ற செய்தியினை முகநூலில் முகநூல் நண்பர்களிலொருவரும், எழுத்தாளருமான அண்ணா கண்ணன் அவர்கள் பகிர்ந்திருந்தார். கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். எதையும் வெளிப்படையாக, தர்க்கரீதியாக வெளிப்படுத்தி எழுதும் தன்மை வாய்ந்தது அவர்தம் எழுத்து. அவரது…

யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள் ?

-அரவிந்தன்- நவீன தமிழ் இலக்கியவாதிகள் திராவிட இலக்கியவாதிகளை புறக்கணிப்பதாக வைரமுத்து தன் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழ்ந்ததா என்பதைப் பார்க்கும் முன், வேறொரு விடயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக இங்கே திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. அரசு அதிகாரம், மாபெரும் கட்சி அமைப்பு, பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் மீதான செல்வாக்கு ஆகிய அனைத்தும் அமையப் பெற்றவர்கள் திராவிடக் கட்சிகளின் பிரதிநிதிகள். மாறாக, நவீன இலக்கியவாதிகள் என அறியப்படும்…

சசி பாண்டே சாகித்ய அகாடமியிலிருந்து விலகினார்

எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார். நாட்டில் பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போககுக்கு அகாடமி மவுனம் சாதிப்பதை எதிர்த்து இவர் தனது பொறுப்பை உதறினார். எதிர்ப்புக் கருத்துகளை வெளியிடும் எழுத்தாளர்கள், பகுத்தறிவை பரப்பும் செய்ல்பாட்டாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதை எதிர்த்து எழுத்தாளர்கள் பலர் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திரும்பி அளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சாகித்ய அகாடமி அசாத்திய மவுனம் காப்பது ஏன் என்று…

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. மக்களின் குரலில் அவர்களது பிரச்சனைகளை முன்வைத்தார் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச். அவருடைய எழுத்து, “நம் காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கிறது” என நோபல் பரிசுக் குழு தெரிவித்திருக்கிறது. இலக்கியத்திற்கான நோபல் விருதுக்கு எட்டு மில்லியன் க்ரோனர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 6 கோடி 91 லட்சம் பரிசுத் தொகையாக அளிக்கப்படும். 67 வயதாகும் அலெக்ஸிவிச் தன் நாட்டின் அரசு…