Category: Literature

சசி பாண்டே சாகித்ய அகாடமியிலிருந்து விலகினார்

எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார். நாட்டில் பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போககுக்கு அகாடமி மவுனம் சாதிப்பதை எதிர்த்து இவர் தனது பொறுப்பை உதறினார். எதிர்ப்புக் கருத்துகளை வெளியிடும் எழுத்தாளர்கள், பகுத்தறிவை பரப்பும் செய்ல்பாட்டாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதை எதிர்த்து எழுத்தாளர்கள் பலர் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திரும்பி அளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சாகித்ய அகாடமி அசாத்திய மவுனம் காப்பது ஏன் என்று…

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. மக்களின் குரலில் அவர்களது பிரச்சனைகளை முன்வைத்தார் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச். அவருடைய எழுத்து, “நம் காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கிறது” என நோபல் பரிசுக் குழு தெரிவித்திருக்கிறது. இலக்கியத்திற்கான நோபல் விருதுக்கு எட்டு மில்லியன் க்ரோனர்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 6 கோடி 91 லட்சம் பரிசுத் தொகையாக அளிக்கப்படும். 67 வயதாகும் அலெக்ஸிவிச் தன் நாட்டின் அரசு…

கவிஞர் திருமாவளவனுக்கு அஞ்சலி – ஜெயமோகன்

ஜெயமோகனின் அனுமதியுடன் இக்கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. நண்பர் திருமாவளவன் இன்று டொரொண்டோவில் காலமானார் என்று செய்தி வந்திருக்கிறது. திருமாவளவன் டொரொண்டோவில் என் நட்புக்குழுமத்தில் நெருக்கமானவராக இருந்தார். 2001ல் நான் முதல்முறையாக கனடா சென்றபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். அதற்குமுன்னர் அவருடைய கவிதை ஒன்றைப்பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். தமிழில் நான் விரும்பும் அரிய கவிஞர்களில் ஒருவராக இருந்தார் திருமாவளவன் ஈழ அகதியாக இந்தியாவில் சிலகாலம் இருந்தார். அப்போது கேரளத்துடன் அவருக்கு நெருக்கமான உறவிருந்தது. கேரளம் பற்றிய…

‘உயிர்ப்பு – 5’ நாடக நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது

கவிஞர் திருமாவளவன் மறைவையொட்டி ‘உயிர்ப்பு – 5’ நாடக நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது எனவும் மீள நிகழ்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

”பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி” நூல் வெளியீடு

உரை மு . பாக்கியநாதன் A . G யோகராஜா (சுவிஸ்) P . பேராதரன் காலம் : செப்டம்பர் 27 , பி .ப 4மணி இடம் : Don Montgomery Recreational Center 2467 Eglinton ave East Scarborough பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்ற நூலினை முன்வைத்து அதன் ஆசிரியர் என்.கே. ரகுநாதன் அவர்களுடன் இருத்தலும் உரைத்தலும் என்ற நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் அழைக்கின்றோம் . நிலவிலே பேசுவோம் தசமங்கலம்…

‘தாய் வீடு’ பத்திரிகையின் அரங்கியல் விழா

‘தாய் வீடு’ பத்திரிகையின் அரங்கியல் விழா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நாலாம் தேதி மார்க்கம் தியேட்டரில் பிற்பகல் 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி எழுதிய நூல்களின் வெளியீடு

இன்று (19.09.2015) மாலை 5.00 மணிக்கு எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி அவர்களின் “பெர்லின் நினைவுகள்”, “அனந்தியின் டயறி” ஆகிய நூல்களின் வெளியீடு நடைபெற உள்ளது. இடம் -: 44 Greenleaf Terrace, Scarborough, M1B 4J3 (Neilson & Mc Levan Crossings) தொடர்புகளுக்கு -: 647-977-5120

கி.பி. அரவிந்தனை (சுந்தர், பிரான்ஸிஸ்) நினைவு கொள்ளல்

ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரும் இலக்கியப் படைப்பாளியும் தமிழ் அறிவியக்கத்தை முன்னிறுத்துவதற்காக செயற்பட்டவரும் ஊடகவியலாளருமான கி.பி. அரவிந்தன் (சுந்தர், பிரான்ஸிஸ்) அவர்களை நினைவு கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு யாழ்ப்பாணம், 128, டேவிற் வீதியில் அமைந்திருக்கும் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் பிரான்ஸிஸ் பற்றி (இளைஞர் பேரவைக்காலம்) அ. வரதராஜப்பெருமாள், தவராஜா ஆகியோரும் சுந்தர் பற்றி (ஈரோஸ் காலகட்டம்) கருணாகரன், சுகு ஸ்ரீதரனும் கி.பி.அரவிந்தன் படைப்புகள்…