Category: Sports

பிரிட்டன் டேவிஸ் கோப்பையை வென்றது!

உலகளவில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிக்கு அளிக்கப்படும் டேவிஸ் கோப்பையை பிரிட்டன் அணி வென்றுள்ளது. மிகவும் பெருமை வாய்ந்த இந்தக் கோப்பையை பிரிட்டன் அணி 1936ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வென்றுள்ளது. தனி நபர்களுக்கு இடையேயான கடைசிப் போட்டியில் ஆண்டி மர்ரி பெல்ஜியத்தின் டேவி கோஃபினை வென்றதன் மூலம் கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டி நம்ப முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என, போட்டிக்கு பிறகு அவை இடம்பெற்ற ஹெண்ட் நகரில்…

ரஷ்ய தடகள சம்மேளனம் தற்காலிக இடைநீக்கம்!

ரஷ்ய தடகள சம்மேளனம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. லண்டனிலிருந்து தொலைக்காட்சி வழியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர்கள் பங்கேற்க முடியாது. மேலும் எவ்விதமான சர்வதேச தடகளப் போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது. ஊக்க மருந்து…

ஊக்க மருந்து தொடர்பாக ஆதாரம் கேட்கும் ரஷ்யா!

ரஷ்ய தடகள வீரர்கள் பரந்துபட்ட அளவில் ஊக்க மருந்தை பயன்படுத்தினர் என மிகக் கடுமையாக விமர்சிக்கும், ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பான ”வாடா”வின் அறிக்கை ஆதாரமற்றது என ரஷ்யா கூறியுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டில் ரஷ்ய தடகள வீரர்கள் ஈடுபட்டதால் அவர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என ”வாடா” கோரியிருந்தது. இதற்கான ஆதரங்கள் தமக்கு அளிக்கப்படும் வரையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம் என ரஷ்ய அதிபரின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ்…

சர்வதேசத் தடகளச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லமைன் டியாக் ஊழலில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் முறையான விசாரணை பிரான்ஸில் தொடங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு பல ரஷ்ய தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தினர் எனும் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட பின்னரும், பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் மீதான தடையை ஒத்தி வைத்தார் என லமைன் டியாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பதினாறு ஆண்டுகள் சர்வதேசத் தடகளச் சம்மேளனத்தின் தலைவராக இருந்த அவர் கடந்த ஆகஸ்ட் மாதம்…

ஒலிம்பிக்கில் மேலும் ஐந்து புதிய விளையாட்டுகள்

ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங், பேஸ்பால், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் கராத்தே ஆகியவை அந்த ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 18 விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டு இந்த ஐந்து விளையாட்டுகளும் இப்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்த ஐந்து போட்டிகள் குறித்த இறுதி முடிவு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் போது எடுக்கப்படும்.புதிதாகச் சேர்க்கப்படும் நோக்கில் எட்டு விளையாட்டுகள்…

உலகின் வேகமான மனிதராக மீண்டும் உசைன் போல்ட் !

பீஜீங்கில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியில் 9.79 நொடிகளில் 100 மீட்டரை ஓடி உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.80 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒரே நேரத்தில் ஓடிய அமெரிக்காவின் ப்ரொமேல் மற்றும் கனடாவின் டெ கிராஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர். இந்த இருவரும் 100 மீட்டர் தூரத்தை 9.92 நொடிகளில் ஓடினர். அமெரிக்கரான மைக்கேல் ரோட்ஜர்ஸ் 9.94 நொடிகளில் ஓடி நான்காம் இடம் பெற்றார்.…