திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி                            – 5215 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி         – 2894 தமிழரசுக் கட்சி                                      – 2099 ஜே.வி.பி                                                – 301

இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 11367 ஐக்கிய தேசியக் கட்சி                    – 9673 ஜே.வி.பி                                        – 1808 டி.பி                                                – 58 பி.ஜே.பி                                          -33

”குளோப் அன்ட் மெயில்” ஏட்டினைத் தொம்சன் குடும்பம் வாங்கியது

கனடாவின் மிகப்பெரிய தேசிய நாளிதழான ”குளோப் அன்ட் மெயில்” ஏட்டினைத் தொம்சன் குடும்பத்தின் ”வூட்பிறிஜ்” நிறுவனம் வாங்கியுள்ளது. ‘பிசிஐ’ என்ற  கனடிய நிறுவனம் ”குளோப் அன்ட் மெயில்’ ஏட்டின் தனக்கான 15 சதவீத பங்குகளை ”வூட்பிறிஜ்” நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் .”வூட்பிறிஜ்” நிறுவனம் ”குளோப் அன்ட் மெயில்” மீதான முழு உரிமையையும் பெற்றுக் கொண்டுள்ளது.

கனடியப் பொதுத் தேர்தல்; கருத்துக் கணிப்பு

ஒன்ராரியோ மாகாணத்தில் பழமைவாதிகள் கட்சியினர் பலம் பொருந்திய மும்முனைப் போட்டிக்குள் இழுத்து விடப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒக்ரோபர் நடைபெறவுள்ள கனடிய பொதுத்தேர்தலில் சமீபத்திய கருத்துக் கணிப்புகளின் சராசரிப்படி தற்பொழுது முதல் இடத்தில் என்டிபிக் கட்சியும் மற்றும் இரண்டாம் மூன்றாம் இடங்களில் பழமைவாதக் கட்சியும் லிபரல் கட்சியும் உள்ளது. பழமைவாதிகள் கட்சியின் சதவீதம் 30.1 சதவீதத்துக்கு நெருக்கமாக இருக்கிறது. புதிய ஜனநாயகக் கட்சிக்கான மக்கள் ஆதரவு  31.9 வீதமாகவும் லிபரல் கட்சிக்கான மக்கள் ஆதரவு  27 சதவீதமாகவும் உள்ளது.

நடைபெறவுள்ள இலங்கைத் தேர்தலில்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். ‘ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல்கால சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வன்முறைகள் மிகவும் குறைந்திருக்கின்றன’ என்று பெஃப்ரல் என்கின்ற சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான சுயாதீன கண்காணிப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். கடந்த கால தேர்தல்களின்போது, அரச சொத்துக்களும் வளங்களும் அரசியல் தேவைகளுக்காக முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை நாடாளாவிய…

ஐ.தே.க மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற சம்மந்தர் ஆதரவு

ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐ.தே.க. 105 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றிப்பெறுமென கருத்துக்கணிப்புக்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றன. நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். இதேவேளை…

கனடியப் பிரதமரை விமர்சிக்கும் ”யஸ்ரின் ரூடோ”

லிபரல் கட்சித் தலைவர் ‘ஜஸ்டின் ரூடோ’  பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தனது மூத்த பணியாளர்கள் , சிலரைப் பதவியிலிருந்து வெளியேற்ற  வேண்டும் என்று கூறியுள்ளார். செனட்டர் ‘மைக் டஃபி’ இனது  செலவினங்களுக்காக  ‘நைஜல் ரைட்’ (ஹார்ப்பரது முன்னாள் தலைமை அலுவலக நிர்வாகி)    90,000  கனடிய டொலர்கள் கொடுத்தது  பற்றி இந்த வாரம் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் ‘நைஜல் ரைட்’ குறுக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார் ‘மைக் டஃபி’ இன் வழக்கறிஞரினால். ‘ரைட்’ தனது சொந்தப் பணத்திலிருந்து ‘ டஃபிக்கு’…

அத்துமீறி பிரிட்டனுக்குள் நுழைபவர்கள் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் காட்டம்

அகதித் தஞ்சம் கேட்பவர்களில், குறிப்பிடத்தக்க அளவினரை பிரிட்டன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கும் டேவிட் கெமரன், அனுமதியில்லாமல் நுழைபவர்களைத் தடுத்து நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். வடக்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காக மத்திய தரைக் கடலைக் கடக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களை வர்ணிப்பதற்கு, மொய்க்கும் ஈக்கள் அல்லது எறும்புகளின் கூட்டத்துக்கு பயன்படுத்தும் ‘swarm’ என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியதை கெமரன் நியாயப்படுத்தியுள்ளார். மக்களை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அதிகளவில் குடியேறிகள் வருவதை விளங்கப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர்…

முன்னாள் போராளி தூக்கிட்டுத் தற்கொலை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த மூன்று  பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் (இயக்கப் பெயர் கெங்கா) சில நாட்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகாலமாகப் போராளியாக இருந்த இவர் 2009, மே மாதத்தின்  பின்பு இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு  இரண்டரை ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட  பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவரது தலைப்பகுதியில் ஏற்பட்டிருந்த கட்டிக்கு சிகிச்சை எடுத்திருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெறப் போதிய பணவசதி இல்லாமையால் மிகவும்…