Tags: Editor’s

‘பராக் ஒபாமா’ பிரச்சார உரை !

முன்னாள் ஜனாதிபதி ‘பராக் ஒபாமா’ புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் “பைடன்” சார்பாக உக்கிரமான பிரச்சார உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதிபர் ‘டிரம்ப்பை’ பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்வது, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தவறியது மற்றும் சீனாவுடனான தனது சொந்த வியாபார நடவடிக்கைகளை மறைப்பது குறித்து ‘ஒபாமா’ கேலி செய்தார். “அவர் இரகசிய சீன வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதால் சீனாவுடன் தொடர்ந்து தனிப்பட்ட வியாபாரம் செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அது எப்படிச் சாத்தியம்?” என ‘ஒபாமா’ தெற்கு பிலடெல்பியா விளையாட்டு…

தமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்

 அமீரலி,மேர்டொக்பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13 ஒரு அபகீர்த்தி வாய்ந்ததென்று பலராலும் கருதப்படுவதால் அதனை உபயோகிப்பதை எவ்வாறாயினும் தவிர்க்கவே விரும்புவர். உல்லாச விடுதிகள் கூட தமது அறைகளுக்கு 13ஆம் இலக்கத்தைத் தவிர்த்தே வரிசைப்படுத்துவதும் உண்டு. இந்தத் துரதிஷ்டத்தினாற்தானோ என்னவோ அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யாப்புத் திருத்தத்துக்கும் இந்த எண்ணே கிட்டியுள்ளது. இது தமிழர்களுக்கோர் அபசகுனமா?…

அமெரிக்க தூதுவர் பேட்டிக்கு சீனத் தூதரகம் எதிர்ப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேட்டியொன்றின் போது இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. நேற்று அமெரிக்க தூதுவர் வழங்கிய பேட்டி குறித்தே சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மூன்றாவது நாடொன்றின் தூதுவர் இலங்கை அமெரிக்க உறவுகளை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தியுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் என தெரிவித்துள்ள சீன தூதரகம் மற்றையவர்களின் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க…

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?   – புருஜோத்தமன் தங்கமயில் –   தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தினையும், கதவடைப்புப் போராட்டத்தினையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகள் வாக்கு அரசியல் ரீதியாக தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில் ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும், அதன் ஊடக சர்வதேசத்துக்கு செய்தி சொல்வதும்…

வசந்தபுரத்துக்கு ஐம்பது கழிப்பறைகள்!

‘வசந்தபுரத்திற்கு 10 மலசல கூடங்கள்’ என ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியான கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ‘வசந்தபுரத்திற்கு 50 மலசல கூடங்கள்’ திட்டமாக மாறியிருக்கிறது! அனைத்துக் குடும்பங்களும் தற்போது மலசல கூடங்களை அமைக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர். குடும்பங்களது முழுமையான பங்களிப்புடனேயே பணிகள் தொடர்கிறது. ஒரு சில மலசல கூடங்களின் கட்டுமானப் பணிகள் முற்றும் நிலைக்கு வந்து விட்டது. கட்டுமானப் பணிகளை எம். ஏ. சுமந்திரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை குறித்து ஹெகலிய ரம்புக்வெல

கேள்வி :- ஊடகத்துறை அமைச்சர் அவர்களே! ஊடகத்துறை சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கிறது. குறிப்பாக 35 ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டு கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று பொறுப்பற்ற வகையில் பதில் வழங்கியிருக்கிறீர்கள்? ஏன் அவ்வாறு கூறினீர்கள்? பதில் :- காணாமல் போனவர்கள் தொடர்பில் எல்.எல்.ஆர்.சியின் அறிக்கையின் படி 21 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர். அதில் 6000 பேர்…

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குமுறுகிறார் !

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின்; “ரிஷாட் பதியுதீன்” போன்றவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்து தனது முக நூலில் பதிவொன்றினை இவ்வாறு இட்டுள்ளார்! இஸ்லாம் வீரத்தின் மார்க்கம், இஸ்லாம் உண்மையின் மார்க்கம், இஸ்லாம் நீதியின் மார்க்கம், இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசுகின்ற எம்மவர்கள் பலர் அதை ஒருபோதும் நடைமுறையில் வெளிப்படுத்துவது கிடையாது. உதட்டளவிலான மார்க்கத்தின் சொந்தக்காரர்களால் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியாது. அவர்கள் இந்த மார்க்கத்தையும், அதனடியாக அடையாளப்படுத்தப்படும் ஒரு சமூகத்தையும்…

சவேந்திர சில்வா

    ஜனவரி 2019 இல் இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பற்றிய ஆவணக்கோவை வெளியாகியுள்ளது.   இவர் இந்த வருட ஆரம்பத்தில் சிறிலங்காவின் Acting Chief of Defense Staff ஆக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவால் நியமிக்கப்பட்டிருந்தார்.   இலங்கையில் 2008 -9 இல் நடைபெற்ற போரில் சவேந்திர சில்வா மிகவும் முக்கியமான முன்னிலைக் கட்டளைத் தளபதியாக இருந்தார்.   இந்தப் போரில் சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆதாரங்கள்…

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் !

இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஒரு அதிர்ச்சி தரும் எண்ணிக்கையைக் கொண்ட போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ஊழல் செய்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் ஆகியோரைத் தனது புதிய அரசாங்கத்தில் பதவிகளில் நியமித்துள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.  இந்த சட்ட ஆய்வு அமைப்பானது ஜனாதிபதி ராஜபக்சவின் உள்வட்டத்தினை சித்தரித்துக் காட்டும் ஒரு விளக்கப்படத்தை மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. இந்த உள்வட்டமானது ஜனாதிபதியின் கஜபாகு படையணியில் இருந்த ஆறு ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களை உள்ளடக்குவதுடன்…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்!

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது. இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம்…